கவிதைகள் ...

பத்தினி ...

தூரத்து மேகத்தை கையுள் அடக்கி ரசிக்கின்றாள்
வீசுகின்ற பூங்காற்றை முந்தானையில் முடிகின்றாள்
மலராத பூவொன்றை பூங்குழலில் அணிகின்றாள்
வெஞ்சான்றுக்குழம்போன்றை முகம்தன்னில் பூசுகின்றாள்
செயற்கையாய் சிரிப்பொன்றை உதட்டோரம் உதிர்க்கின்றாள்
தொடுவானம் தூரமென்று மனதுக்குள் சிரிக்கின்றாள்
விடிவெள்ளி தோன்றுமென்று கதவோரம் சரிகின்றாள்
தொலைத்துவிட்ட பால்யத்தை ஒரு முறை நினைக்கின்றாள்
அடி வாங்க நேருமென்று, விரைவாக விரைகின்றாள்
அந்தி சாய்ந்து போனதனால் அறைதனில் அடைகின்றாள்
முகமறியா உருவத்தை மார்போடு அணைக்கின்றாள்
மீண்டும் ஒரு அரக்கன் என்று விம்மி விம்மி அழுகின்றாள் ...

~~~~~~~~~~~~~~~~~~~~~~***********~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பய புள்ள ...

பள்ளிக்கூடம் போகக்கூட என் முகம் பார்த்து அழுத பய
படிச்சாத்தான் சோறு நு சொன்னவுடன் போன பய
பள்ளிக்கூட மணி அடிச்சா என் முகம் காண ஏங்கும் பய
முந்தானை முடிச்சுதனில் சுண்டு விரல் கோத்த பய
நாட்டார் கடை போகும் முன்னே என் கால் தொட்டு போன பய
என் காலில் தச்ச முள்ள அவன் கால நெனச்ச பய
அந்த முள்ள வெறும் காலில் நசுக்கியே சாச்சா பய
பொண்டாட்டி வேணாமுன்னு பிடிவாதம் செஞ்ச பய
என்போல வருவாளா நு எப்போதும் நெனச்ச பய
இந்த கண் போன கெழவிய வெளிய போ நு சொன்ன பய
மூணு வேளை திங்காட்டி செத்துடுவியா நு கேட்ட பய
அவன் கால என் நெஞ்சில் வெச்சு உசுரோட கொன்ன பய
அவளோட பேச்சக்கேட்டு, என் உறவ அறுத்த பய
பிடிவாதம் பண்ணாம எனக்கு கொள்ளி போட்ட அந்த பய
அவனுக்கு தான் என்ன தெரியும், நா பெத்த செல்ல பய

~~~~~~~~~~~~~~~~~~~~~~***********~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Comments

  1. Awesome maams! excellent ones!

    ReplyDelete
  2. gethu sir..arakkana?? n 2nd poem najamavae nenja nakkiduchu..

    ReplyDelete
  3. renvathu romba gethu..somehow i guess no girl can ever replace amma..a bit of delusion during the honeymoom period..free

    ReplyDelete
  4. EN MAVANE
    pinni eduthu vittai
    [karmegam pondra karuthakoondalai,
    mudindal aval,
    amavasay pondra vadanathil
    minnalayi vagidu irukka,

    Eppozhudu mazhai peyumo endra kangal
    kaathirundana idipola varum arakkanukkaga!]

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Kadalai Podaradhu Eppadi ??