கொலு...

கொலு - தமிழ் பண்டிகைகள் ல ஒரு முக்கியமான ஒரு பண்டிகை, அதுவும் என்ன மாதிரி மைலாப்பூர் ல பொறந்து வளர்ந்த ஒரு ஆசாமிக்கு கொலு வந்தாலே சந்தோஷம் தான், அப்போ தான் அழகழகான ஐயர் ஆத்து பொண்ணுங்க கண்ணுக்கு குளிர்ச்சியா தழைய தழைய புடவைய கட்டிண்டு எங்க வீட்டுக்கு அழைக்க வருவாங்கங்கர ஒரு காரணத்துக்காக மட்டும் இல்ல, கொலு பொம்மை, கொலு படி, வகை வகையா சுண்டல், லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட் வீட்டுக்கு வர மாமி / பொண்ணுங்க பாடற பாட்டு. அது என்னமோ தெரியாது, இந்த கொலு நேரத்துல தான் அவங்க அவங்களுக்குள்ள ஒளிஞ்சிண்டு இருக்கற சுசீலா, ஜானகி, சித்ரா எல்லாரும் வெளிய வந்து எட்டிப்பார்பாங்க, ஆனா உண்மைய சொல்லணும் நா, நிறைய மாமி / ஐயர் ஆத்து பிகர்ஸ் ரொம்ப நல்லாவே பாடுவா, நா சில டைம் நினைச்சதுண்டு, இவாலாம் ஏன் சினிமா கு பாட போகல நு, ஆனா அதே சமயம், இவாள ஏன் டா பாட சொன்னோம் நு வருத்த பட வெக்கற அளவுக்கும் சில பேர் பாடி நம்பல டார்ச்சர் போடுவா. இப்படி ஒரு அருமையான கொலு நேரத்துல நடந்த ஒரு மகா காமெடி மேட்டர் ஒன்ன தான், நா இப்போ உங்களுக்கு சொல்ல போறேன், இத ஏன் தமிழ் ல எழுத முடிவு பண்ணினேன் நா, இத இங்கிலீஷ் ல சொன்ன, சொதப்பலா இருக்கும், ஏன்னா எல்லாமே ஐயர் ஆத்து பாஷை ல சொன்னா தான் என்ஜாய் பண்ண முடியும் ...

நா பொறந்தது, வளர்ந்தது, படிச்சது, ஏன் வேலைக்கு போனது கூட மைலாப்பூர் சுத்து வட்டாரத்துல தான். மைலாப்பூர் மாட வீதி பக்கத்துல தான் எங்க வீடு, ஆத்துலேர்ந்து கல்லு விட்டு எரிஞ்சா கபாலீஸ்வரர் கோவில். இந்த கொலு டைம் ல, மைலாப்பூர் குளத்த சுத்தி எக்கச்சக்க பொம்மை கடை வெச்சுருப்பா, அந்த சமயத்துல மைலாப்பூர்க்கு இருக்கற ஒரு எலெக்ட்ரிக் அட்மாஸ்பியர் வேற எப்பவும் இருக்காது. மைலாப்பூர் எப்பவுமே பண்டிகை காலங்கள் ல அருமையா இருக்கும், திரும்பவும் சொல்லறேன், மைலாப்பூர் ஐயர் ஆத்து பொண்ணுங்கள சைட் அடிக்கணும் நா, பண்டிகை டைம் ல தான் அடிக்கணும். சப்ப பிகர் கூட புடவை கட்டினா, சட்டு நு ஒரு பக்கம் திரும்பி பார்க்க தோணும், நம்ப பேசிக்காவே காஞ்சு போயிருக்கோம்ங்கறது உண்மைனாலும், நா இப்போ சொன்னது சத்தியமா பொய் இல்ல. எங்காத்துல கொலு நு சொன்ன அது நித்திய கொலு தான், எங்க அப்பா ஒரு ஷோகேஸ் ல பெர்மனென்ட் ஆ லைட் எல்லாம் செட் பண்ணி பொம்மை எல்லாம் அடுக்கியே வெச்சுருப்பா, ஆனா எங்காத்து கொலு ல ஹைலைட் என்ன நா, அது நாங்க விடற "மின்சார ரயில்". எங்க அத்திம்பேர் ஆத்துலேர்ந்து அதை தூக்கிண்டு வந்து, தண்டவாளம் எல்லாம் செட் பண்ணி, அதுக்கு கனெக்க்ஷன் குடுக்கறது இந்த அம்பியோட வேலை.

நெஜமாவே அது ஒரு சூப்பர் ட்ரைன், நிஜம் கரண்ட் ல ஓடற ஒரு பொருள். அது கூட ஒரு நிஜம் ரயில்வே ஸ்டேஷன் ல என்னல்லாம் இருக்குமோ அதனை பொருளும், அதோட சின்ன சைஸ் ல குடுத்துருப்பான். நீங்க அதா செட் பண்ணி முடிச்சா ஒரு சின்ன ரயில்வே ஸ்டேஷன் ந நேருல பார்க்கறா மாதிரி இருக்கும். இதுக்கு நடுவுல, ஒரு தாம்பாளத்துல போட் விடுவும், அந்த காலத்துல ஒரு போட் உண்டு, அது உள்ளுக்குள்ள அகல் விளக்கு போட்டு ஏறிய விட்டேள் நா, "பட பட பட பட" நு சத்தம் போட்டுண்டே சூப்பெரா அந்த தாம்பாளத்துக்குள்ள சுத்தி சுத்தி ஓடும். இந்த ஒரு விஷயத்த பார்கரத்துகே எங்காத்துக்கு கூட்டம் வரும். எல்லா பொண்ணுங்களுக்கு முன்னாடி, ஐயா தான் ரயில் ஓட்டி காட்டுவாரு. கண்டிப்பா ஏதாவது ஒரு பொண்ணு, அந்த ரயில எப்படி ஓட வெச்சேன் நு கேள்வி கேட்கும், நானும் இது தான் சாக்கு நு, நல்லா மொக்கைய போட்டு, அந்த பொண்ணுக்கு புரிய வெப்பேன். அந்த பொண்ணும் நான் தான் "ஜார்ஜ் ஸ்டீவென்சன்" ங்கற மாதிரி ஆச்சர்யமா பார்க்கும்.

நா அப்போ பத்தாவது படிச்சுகிட்டு இருந்தேன், மீசை கூட அரை குறையா முளைச்ச வயசு, ஸ்வீட் சிக்ஸ்டீன் நு கூட சொல்லலாம். எப்பவுமே பார்த்தீங்கன்னா, இந்த காத்தாடி சீசனும், கொலுவும் ஒன்னு போல வரும், அப்போ தான் காத்து செட்டில் ஆகி, வானம் அமைதியா இருக்கும். மைலாப்பூர் ல காத்தாடிக்கு மாஞ்சா போடறதுல வித்தகர், சாட்ஷாத் அடியேனே தான், சோ என்ன தேடி பக்கத்துல இருக்கற சேரி லேர்ந்து, நிறைய நண்பர்கள் வருவா, எங்க அப்பாக்கு, நா அவாளோட பழகறது சுத்தமா புடிக்காது. நா அவாளோட பழகினா, கேட்ட வார்த்தை எல்லாம் கத்துண்டுடுவேன் நு அவருக்கு ஒரு பயம், ஆனா இதுல கொடுமை என்ன நா, அவா யாரும் எனக்கு கேட்ட வார்த்தை கத்து குடுக்கல, நல்ல ஸ்கூல் ல படிச்சு, பெரிய பெரிய யூனிவெர்சிட்டி ல பட்டம் வாங்கின மக்கள் தான் எனக்கு "fuck" உம், "shit" உம், "a** ho**" உம் கத்து குடுத்தது. எனக்கு ஆனா அந்த சேரி பசங்களோட தான் பழக புடிக்கும், அவா கிட்ட பணம் காசு இல்லையே தவற, நல்ல மனசு இருந்துது. எங்காத்துக்கு ஒரு சேரி பையன் வந்தா, எங்க பாட்டி அவனுக்கு ஒரு சொட்டு தண்ணி கூட குடுக்க மாட்ட, அதுவே நா அந்த சேரி பையன் ஆத்துக்கு போனா, அவங்க அம்மா எனக்கு உட்கார வெச்சு சோறு போடுவா. யாருக்கு வேணும் பணமும், ஜாதியும் சொல்லுங்கோ ? அந்த சேரி பசங்க கட்துகுடுத்த பல நல்ல விஷயம் தான் இன்னிக்கு என்ன இந்த நிலைமைக்கு வர வெச்சுருக்கு. சேரி ரொம்ப தத்துவம் வேண்டாம், நம்ப நேரடியா காமெடி விஷயத்துக்கு வருவோம், சோ நா என்ன சொன்னேன் உங்க கிட்ட ? மைலாப்பூர்லையே காத்தாடிக்கு சூத்திரம் கட்டி, மாஞ்சா போடற எக்ஸ்பெர்ட் இந்த ஐயர் ஆத்து பையனே தான் :)

ஒரு நாள் சாயங்காலம் நா எங்காத்துக்கு வந்துருந்த மாமி's கு, ரயில் ஓட்டி காமிச்சுண்டு இருந்தேன், அன்னிக்கு எங்காத்துல கொண்டகடலை சுண்டலும், ராகி ல பண்ணின ஒரு கேசரியும் செஞ்சுருந்தா. ராகி ல பண்ணின கேசரி, நம்ப ரெகுலர் ஆரஞ் கலர் ல இருக்காது, அது கிட்ட தட்ட, மண்ணுல போட்டு பெரட்டின கேசரி மாதிரி, brown நா இருக்கும். எங்க அதை வரவாளுக்கு எல்லாம் கேசரியும், சுண்டலும் குடுத்துண்டு இருந்தா, நா பாட்டுக்கு செவனே நு ரயில் ஓட்டிண்டு இருந்தேன், அப்போ திடீர் நு வாசல் ல ஒரு அழைப்பு - "ஐயரே ... வூட்ல கீறியா?, நான் முத்து வந்துருக்கேன்" நு, எனக்கு சரியா கேட்டுதோ இல்லையோ, எங்க அப்பாக்கு கெட்டுடுத்து அவனோட அழைப்பு, நா அடிச்சு புடிச்சு வாசலுக்கு போய் அவனுக்கு என்ன வேணும் நு கேட்டேன். "நாளைக்கு P S High School" கிரௌண்டு ல, நம்ப காத்தாடி விட போறோம், அதுனால நீ இந்த வஜ்ரத்த புட்டி(Glass) போட்டு அரைச்சு, இந்த நூல் கண்டு ல மான்ஜாவா தடவி நாளைக்கு கொண்டுட்டு வரியா ? நு கேட்டான், நானும் அதுனால என்ன, போட்டு குடுத்துட்டா போச்சு நு, அந்த காரியத்துக்கு ஒத்துகிட்டேன். வஜ்ரம் நா என்ன நு தெரியாத வாசகர்களுக்கு ஒரு பின் குறிப்பு - வஜ்ரம்ங்கற வஸ்து இஸ் மேட் அவுட் ஆப் 5 பொருள்'s - புளியாங்கொட்டை, லப்பம், கோந்து, மைதா மாவு அண்ட் வெல்லம், இதெல்லாம் போட்டா தான் மாஞ்சா போடும் போது, நூல் கெட்டியா இருக்கும், இது கூட கடைசியா சோடா பாட்டில் அரைச்சு, நல்ல கொழ கொழ நு கிண்டி, ஆவகமா நூல் மேல தடவனும், வஜ்ரதொட காம்போசிஷன் கரெக்கட்டா இல்லாட்டி உங்க காத்தாடி டீல் ஆகறத்துக்கு வாய்புகள் அதிகம்.

அவன் ஏற்கனவே வஜ்ரத்த நல்லா அரைச்சு ஒரு டப்பா ல போட்டு குடுத்துருந்தான், அதா அவசர அவசரமா எங்க அப்பா கண்ணுக்கு தெரியாம, சமையல் கட்டு பக்கத்துல இருந்த மேடைல வெச்சுட்டு நா திரும்பவும் ரயில் விட போயிட்டேன். மணி சுமார் ஒரு 8 இருக்கும், அப்போ தான் என்டெர் ஆனார் அந்த 75 தாத்தா. என்ன பார்த்ததும், நா எப்படி படிக்கறேன், எப்படி படிக்கணும், எவ்வளோ மார்க் வாங்கினா நல்லது, எந்த மாதிரி மேல் படிப்பு படிக்கணும், அது இது நு 1008 விஷயம் பேசினார், எங்க அத்தை ஆத்துக்கு வந்துருந்த மாமிகளோட அரட்டை யா போட்டுண்டு இருந்தா, எங்க அப்பா சும்மா இல்லாம, டேய் தாத்தாக்கு அந்த ராகி கேசரி கொண்டு குடுடா நு சொல்லி என்ன அனுப்பிட்டார், நானும் ஏதோ ஒரு கவனத்துல நம்ப முத்து குடுத்த "வஜ்ரத்துல" ஒரு ஸ்பூன போட்டு, தாத்தா கிட்ட குடுத்துட்டேன், சத்தியமா அது வஜ்ரம் நு எனக்கு அப்போ தோனல. வஜ்ரத்துல வெல்லம் ஜாஸ்த்தியா போட்டுருபான் நு நினைக்கறேன் முத்து, தாத்தா அதோட பல் செட்ட போட்டுண்டு கட கட நு எல்லா வஜ்ரத்தையும் சாப்பிட்டு முடிச்சுடுத்து.


நா ராத்திரி ஒரு பத்து மணிக்கு அந்த வஜ்ரா டப்பா வ தேடறேன், வஜ்ரா டப்பா காணும், எங்க டா நு நானும் தேடி தேடி பார்க்கறேன், கண்ணுல மாட்டல, ஒரு வேலை எங்க அப்பா அதை எடுத்து எங்கயோ ஒளிச்சு வெச்சுட்டாரோ நு நெனச்சேன், அப்பொறம் ஏதோ தண்ணி குடிக்கலாம் நு சமையல் கட்டு உள்ள நுழைஞ்சேன், உள்ள போனா ஒரு பேரதிர்ச்சி, முத்து குடுத்த வஜ்ரா டப்பாவ எங்க அத்தை சுத்தமா அலம்பி கவுத்து வெச்சுருக்கா, ஐயோ, அதை பார்த்த உடனே எனக்கு தெரிஞ்சு போச்சு, நா என்ன காரியம் பண்ணினேன் நு. மரம் நின்னுச்சு, பறவை நின்னுச்சு, அலை மேல அடிச்சு நின்னுச்சு, எரிமலை வெடிச்சு நின்னுச்சு, ஒரு நிமிஷம் என் இதய துடிப்பும் நின்னுச்சு. உடம்பெல்லாம் வேர்த்து போச்சு, இந்த சம்பவம் நடந்து ஒரு 4 மணி நேரமாவது ஆகிருக்கும், இன்னும் பக்கத்தாத்துலேர்ந்து ஒரு அழுகை சதமும் வரலையே, ஒரு வேளை ஆஸ்பத்திரிக்கு தூக்கிண்டு போய்ட்டாளோ, ஒரு வேளை ஆஸ்பத்திரி ல அவர் செத்ததுக்கு காரணம் வஜ்ரம் தான் நு கண்டு புடிச்சுடுவாளோ நு எல்லாம் எனக்குள்ள ஒரே பீதி, நல்ல வேளை, என் பீதி, அடுத்தநாள் அந்த தாத்தா கு பேதி நு சொன்னதுக்கு அப்புறம் தான் அடங்கித்து. ஆமாம், முழுக்க கால் கிலோ வஜ்ரம் சாப்டா பேதி ஆகாம வேற என்ன ஆகுமாம். ஆனா இதுல ஒரு விஷயம் பாருங்கோ, என்னோட வஜ்ரத்த சாப்ட அந்த தாத்தா எப்போ தெரியுமா மண்டைய போட்டார் ? அவரோட 95 வயசுல, ஆகவே, நீண்ட ஆயூள் பெற வஜ்ரம் சாப்புடுங்கோ நு சொல்லறேன் :)

Comments

 1. nanum antha area payan thaan..west circular road la thaan iruken..nan yezutha nenchathellam neenga yezhuthuteenga..thatha and vajram..lol..thapicheenga saar..avanga alavuku namyelam helthy illa.. aravathu thandina perusu..free

  ReplyDelete
 2. Thatha "Vajram panja kattai" polirukku :-P

  In fact indha iyer veetu paiyanum neraya matter senjirukaen...new turkish towel eduthutu poi mazhai thanni seru la meen pudichu, horlicks bottle le vekkardhula aaramichu...manja, kathadi, deal, gilli, goli...varaikkum yellam...of course with lots of scolding from family dhaan...

  ReplyDelete
 3. Paavam antha thaatha. Ungalukku enna paavam panninaru? By the way, were u the only child?

  ReplyDelete
 4. @Soin - Oh West Circular Roadaa. Good!
  @Chan - "Vajram Paanja Kattai" was a good one.
  @ChennaiGirl - Oh yaa, I am the only child :)

  ReplyDelete
 5. Anonymous8:38 PM

  super fulla comedya erunthuchu,i enjoyed and smile very much...but u r veru chattai in ur childhood life(lollu overa erunthuruku), unga home ku vantha sapudurathuku munadi hospital la oru bed book panitutan varanum pola,thaatha paavam(en entha kolla veeri,thaatha pesuratha stop pana vera idea kadaikaliya):):)

  ReplyDelete
 6. Maitha maavu,vellam,konthu combination nalla thaan erunthurukkom pole!!!

  :-)

  ReplyDelete
 7. Never knew so much prof work is needed for a kaathaadi...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Kadalai Podaradhu Eppadi ??