குழந்தை பேசினால் ...

வாசகர்களின் மேலான வேண்டுகோளுக்கு இணங்க, எனது பழையதொரு படைப்பை இங்கே தமிழில் மொழி பெர்யத்துள்ளேன். இது நான் வெகு நாட்களுக்கு முன்னதாகவே செய்திருக்க வேண்டிய ஒரு வேலை, அதை இன்று செய்கிறேன். எனது வாசகர்களுக்கு இது புதிதாக இருக்காது, ஆனால் என் புது வாசகர்களுக்கு இது சுவையானதாக இருக்கும் என்று நம்புகிறேன்...

நான் எனது நெருங்கிய நண்பன் ஒருவன் வீட்டிற்கு சென்றிருந்தேன் அவனுக்கு தெய்வத்தின் மறு உருவமாய் அழகானதொரு ஆண் குழந்தை உள்ளது, அவனுக்கு இரண்டு வயது தான் ஆகியிருக்கும், நல்ல அழகான முகம், கொழு கொழுவென்று கன்னங்கள், திராட்சை பழம் போல கரு விழி, அவருக்கும் அவனை அள்ளி ஆசை தீர முத்தம் கொடுக்கவேண்டும் என்று தான் தோன்றும். அவன் என்னை பார்த்த பார்வையிலேயே எனக்கு புரிந்து விட்டது அவன் என்ன நினைக்கிறான் என்று - "இத நம்போ போன வாரம் ஜூ ல பார்த்தோமே, அது ஏன் வீட்டுக்கு வந்துருக்கு". முதலில் என்னிடம் வர தயங்கியவன், பின்னர் நான் அவனுக்காக வாங்கிச்சென்ற கார் பொம்மையை பார்த்ததும், எனக்கும் அவனுக்கும் பல வருடம் நட்பு இருப்பது போல், என்னிடம் ஒட்டிக்கொண்டான், சரி, மனிதனின் "லஞ்ச" வெறி ஆரம்பிக்கும் காலம் இது தான் என்று புரிந்து கொண்டேன்.

என் நண்பனின் மனைவி, தன் மகனின் அருமை திறமைகளை காட்சியிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார் போலும், பாவம் அந்த பிஞ்சை போட்டு பாடாய் படுத்தி விட்டார், மாமாக்கு கண்ண காட்டு, மாமாக்கு மூக்க காட்டு, மாமாக்கு தொப்பைய காட்டு என்று படிப்படியாக கீழே வந்தார், நல்ல வேலை அவர் மேலும் கீழே இறங்கும் முன், நான் கிளம்பிவிட்டேன், பாவம் அந்த பிஞ்சு என் முன் ஆடி பாடி, படாத பாடு பட்டுவிட்டது. அப்பொழுது என் மூளைக்குள் ஒரு பொறி தட்டியது, வாய் பேச்சு வராத குழந்தை, இந்த கூத்தை எல்லாம் பார்த்து, தன் மனதுக்குள் என்ன பேசிக்கொள்ளும் என்று, அப்படி சிந்திக்கையில் தோன்றியது தான் இந்த தொகுப்பு.

அப்பா: டேய் மாமாக்கு குட் மார்னிங் சொல்லு மா ...

பாப்பா: டேய் நாதாரி, சாயங்காலம் 7 மணிக்கு எந்த லூசாவது குட் மார்னிங் சொல்லுமாடா ?

விருந்தாளி: என்னடா முழிக்கற ... குட் மார்னிங் சொல்லு எனக்கு ...

பாப்பா: எங்க அப்பன் தான் லூசு நு நினைச்சேன், நீயும் லூசாடா ? டேய் சொட்ட நாயே, நீ முன்ன பின்ன குட் மார்னிங் கேட்டதே இல்லையா ?

அப்பா: ஹே, மாமாக்கு கண்ணு எங்க நு காட்டுடா செல்லம் ...

பாப்பா: ஏன், அந்த போட்ட நாயிக்கு அது தெரியாதா ? யோவ் இதெல்லாம் ஓவரு ... சொல்லிட்டேன்

குழந்தை கண் எங்கே இருக்கிறது என்று காட்டுகிறது ...

விருந்தாளி: கை குடு ... கை குடு ... சூப்பெரா காட்டிட்டியே ... குட் பாய் ...

பாப்பா: ஆமாம், நாங்க இவருக்கு NASA ல இருக்கற ராக்கெட்ட காமிசுட்டோம் பாரு, மூதேவி

அம்மா: செல்லம், மாடு எப்படி மா கத்தும் ...

பாப்பா: ஹ்ம்ம், வாயால தான், இது என்ன கொஸ்டின், ராஸ்கல் ...

விருந்தாளி: நோக்கு மாடு மாதிரி கூட கத்த தெரியுமா ?

பாப்பா: டேய், நீயே ஒரு எரும மாடு ... உனக்கு நா மாடு மாதிரி கத்தி காட்டணுமா ? ... விட்டா பால் கறந்து காட்ட சொல்லுவா போலருக்கே ...

குழந்தை ... மாடு போல கத்தி காட்டுகிறது ... ம்ம்ம்மாஆஆ

விருந்தாளி: அப்பொறம் வேற என்ன எல்லாம் செய்ய தெரியும் குட்டிக்கு ?

பாப்பா: நார பயலே, சும்மா இல்லாம எடுத்து வேற குடுக்கரியா ? பரதேசி ... எங்க அப்பன் லோலாய்தனம் தாங்க முடியாதே ...

அப்பா: குட்டிமா ஆடு எப்படி மா கத்தும் ?

பாப்பா: அய்யய்யோ, விட்ட டிஸ்கவரி சானெல் ல வர எல்லா மிருகம் மாதிரியும் கத்தி காட்ட சொல்லுவாங்க போலருக்கே ... ஆண்டவா என்ன காப்பாத்து ...

விருந்தாளி: ஒ, நீ ஆடு மாதிரி கூட கத்துவியா ?

பாப்பா: நா ஆடு மாதிரியும் கத்துவேன், கழுத மாதிரி கூட மிதிப்பேன், வேணுமா ?

குழந்தை ஆடு போல் கத்துகிறது ... ம்ம்மேஆஅ ... ம்ம்ம்மாஅஏஎ ...

பாப்பா: யோவ், இவளோ நேரம் நீ சொன்னதெல்லாம் செஞ்சேன், ஆனா இத மட்டும் செய்ய சொல்லாத, இந்த பண்ணிக்கேலாம் கை குடுக்க முடியாது ... ப்ளீஸ் ...

அம்மா: கை குடுடா செல்லம் ... (கொஞ்சம் வெக்கம் அவளோதான் ...)

பாப்பா: அய்யோ என்ன யாருமே புரிஞ்சுக்க மாட்டீங்களா ? இந்த மாமா மூச்சா போயிட்டு கையே அலம்ப மாட்டாரே, இவருக்கு நா எப்படி கை குடுக்கறது ?

குழந்தை கடைசி வரை கையே குடுக்கவில்லை ... புத்திசாலி குழந்தை அது ...

அம்மா: சரி ... தாத்தா எப்படி மா உம்மாச்சி கும்புடுவா ?

பாப்பா: உம்மாச்சி கிட்டயே போய் சேர போற தாத்தா எப்படி உம்மாச்சி கும்புடுவா நு கேட்கறியே, இது உனக்கே நல்லா இருக்கா ?

அப்பா: உம்மாச்சி ... காப்பாத்து .... (எடுத்து குடுக்கராங்கலாம் ...)

விருந்தாளி: தாத்தா உம்மாச்சி கும்பிடும் பொது, நீ தான் மணி ஆட்டுவியா ?

பாப்பா: டேய் சொட்ட நாயே ... நா ஜெட்டி போடாட்டி ... எப்பவுமே மணி தான் டா ஆட்டுவேன், கில்மாவா கொஸ்டின் கேட்காத ...

குழந்தை "உம்மாச்சி ... காப்பு ..." என்று மழலை தமிழில் சொன்னது ...

அப்பா: சரி டா செல்லம் ... மாமாக்கு "பல்லேலக்கா ... பல்லேலக்கா" பாட்டு பாடி காட்டுமா ...

பாப்பா: ஆமாம், இவரு பெரிய A R Rehman, நா பாடி காமிச்சா, உடனே எனக்கு அவரோட அடுத்த படத்துல சான்ஸ் குடுத்துட போறாரு ...

விருந்தாளி: பல்லேலக்கா ... பல்லேலக்கா ... சேலத்துக்கா ... (பாடி காட்டறாரு ...)

பாப்பா: ஐயோ ... தாங்கல ... நீ பாடாத ... கழுதை குசு விடறா மாதிரி இருக்கு ... SPB என்ன அழகா பாடிருப்பாறு தெரியுமா ...

குழந்தை ... பல்லேலக்கா ... பல்லேலக்கா ... தேலதுக ..." என்று மழலை மாறாமல் பாடி காண்பிக்கிறது ...

விருந்தாளி: அட தங்கமே ... என்ன அழகா பாடற நீ ... மாமாகிட்ட வா டா தங்கம் ...

பாப்பா: மகனே ... உன்னால தானே எங்க அப்பனும் ஆத்தாளும் ... என்ன அந்த கொடுமை படுத்தினாங்க ... இந்தா வாங்கிக்கோ .... உச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ்

குழந்தை சூடாக ஒரு ஒண்ணுக்கை மாமா மேல் இறக்கியது ...

அம்மா: அட குட்டி, மாமா பாண்ட் ல சூ சூ போய்ட்டியா ? சமத்து டா நீ ...

குழந்தை அதே "பல்லேலக்கா ... பல்லேலக்கா ... தேலதுக " என்று பாடிக்கொண்டே தன் அறைக்குள் ஓடி மறைந்தது ...

சூ சூ வாங்கிய மாமாவின் முகம் சுருங்கியது ...

Comments

  1. Though its a repeat....Awesome man...this one rocks!

    ReplyDelete
  2. Seriously dude!! if some kid really thinks like this is , i am gonna use soap and hard bristled brush on him....

    Cool imagination though... Kalakrel pa....

    next time i visit someone with kids, i ll surely remember this :P

    ReplyDelete
  3. Hey, Sat - yennayaa ippidi oru post a pottu dharma sangadathula vittute :). inime yeppo yenga veetukku guest vandhaalum, naan yen ponnu pakathuleye porathukku thayanguven polirukke....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Madras Tamil in IT Industry