கிரகணம் ...

ஆஹா, ஆரம்பிச்சுட்டான் யா ஆரம்பிச்சுட்டான் யா, எல்லாம் என்னோட பக்கத்தாத்து மாமாவத்தான் சொல்லறேன், மூணு மாசமா கிரகணம் வரப்போறது கிரகணம் வரப்போறது என் மண்டைய ஒருட்டிண்டிருந்துது, நானும் ஆமாம் மாமா, ஆமாம் மாமா நு அதுக்கு ஜோடியா எந்த்து போட்டுண்டு இருந்தேன், அது இப்படி ஒரு சங்கடத்துல முடியும் நு நா நினைச்சு கூட பார்கலையே, இன்னிக்கு அது அடிச்ச கூத்துக்கு அளவே இல்லாம போச்சு, என்ன நடந்துது நு சொல்லறேன் கேளுங்கோ ...

சுமார் நாலு மணி இருக்கும், நானும் அசினும் ச்விச்ஸ் ல ரொமான்ஸ் டூயட் ஒன்னு போட்டுண்டு இருந்தோம் (கனவுல தான்), அப்போ "டிங் டாங் ... டிங் டாங் ... " நு ஒரு சத்தம், என்னடா கனவுல மணி அடிக்கறதே நு யோசிச்சுண்டே இருந்தேன், உடனே என் மொபைல் அடிச்சுது "மொட்ட மாமா calling ...." நு, ஆஹா, கெளம்பிட்டான்யா ... கெளம்பிட்டான்யா நு ... மண்டைய சொரிஞ்சுண்டே வாச கதவ தொறந்தேன், அதுக்கு ஏன் ஒரு கால வீண் பண்ணுவானே நு ஒரு நல்ல எண்ணம் தான்.

"என்னடா இன்னும் தூக்கம், கிரகணம் புடிக்க போறது, வா மொட்ட மாடிக்கு போலாம்"

நா மனசுக்குள்ள (கிரகணம் தான் புடிச்சுடுத்தே எனக்கு), ஆமாம் மாமா புடிக்கபோறது, செத்த இருங்கோ, பல்ல தேச்சுட்டு வந்துடறேன் ...

பல்லெல்லாம் ஒனும் தேய்க்க வேண்டாம், நம்ப என்ன டூத் பேஸ்ட் விளம்பரத்துலையா நடிக்க போறோம்

நா மனசுக்குள்ள (யோவ், உனக்கு தான் பல்லு இல்ல, எனக்குமாயா ?), அதுவும் சரி தான் மாமா, இருங்கோ என்னோட கிளாஸ், பைனாகுளர் எல்லாம் எடுத்துண்டு வரேன்

ஆமாம் டா எனக்கு பைனாகுளர் இருந்தா தான் கண்ணு செத்த பளிச்சு நு தெரியும் ...

நா மனசுக்குள்ள (ஓய், உமக்கு மூக்குகண்ணாடியே பைனாகுளர் தானே ஓய்)

ரெண்டு பெரும் கொட்டற பெங்களூர் குளுருல, தலைக்கு முக்காட போட்டுண்டு புள்ள புடிக்கறவன் மாதிரி மொட்ட மாடிக்கு போனோம், அங்க போனா ஒரு அதிர்ச்சி, ஏற்கனவே அங்க ஒரு மாமா / மாமி பஞ்ச பாத்திரம் எல்லாம் வெச்சுண்டு, மணி ஆட்டிண்டு இருந்தா (ப்ளீஸ், இது அந்த மணி இல்ல, சுவாமிக்கு அடிக்கற bell தப்பா புரிஞ்சுக்க கூடாது). ஸோ மூணு கெழம் அண்ட் திஸ் அரை கெழம் (நான் தான்) நாலு பெரும் ஆறு மணிக்கு புடிக்கபோர கிரகணத்துக்கு, நால்ட்ர மணிக்கே அண்ணாந்து பார்த்துண்டு இருந்தோம்.

ஏன் டா சதீஷ், ஒரே மூட்டமா இருக்கே, கிரகணம் தெரியும்ங்கற ? எனக்கு என்னமோ நம்பிக்கை இல்ல

நா மனசுக்குள்ள (மகனே அது மட்டும் தெரியாம போகட்டுமே, அடுத்து தவசம் தான், கிரகணம் இல்ல) வெயிட் பண்ணி பாப்போம் மாமா, எனக்கு என்னமோ தெரியும் நு தான் தோணறது.

நா திருவெல்லிக்கேணி ல இருந்தபோ இப்படி ஒரு கிரகணம் வந்துது, எல்லாரும் என்னமோ நேர்ல பாக்க கூடாது, கண்ணாடி போட்டுண்டு தான் பாக்கணும், அது இது நு பயன்துண்டே இருந்தா, எனக்கு அப்போ சின்ன வயசு, நா அதெல்லாம் நம்பலையே, போங்கடா நீங்களும் உங்க மூட நம்பிக்கையும் நு, அப்படியே கிரகணத்த நேரா பார்த்தவன் ... சேரி சேரி, அந்த தேர்த்த சொம்ப எடேன் கொஞ்சம் ...

மாமா, அது தேர்த்த சோம்பு இல்ல, மாமியோட மடிசார் முண்டு ... இப்போ தெரியறதா ஏன் கிரகணத்த நேர்ல பார்க்க கூடாது நு சொல்லரா நு ?

மணி அஞ்சு, அதே மெகா மூட்டம், சூரியன் இருக்கற திசைக்கு நேர் ஆப்போசிட்டா நம்ப திருவெல்லிக்கேணி மாமி பைனாகுளர் ல போகஸ் பண்ணிண்டு இருக்கார் ....

ஏண்டா உன் லெந்ஸொட பிக்செல் என்ன ?

பைனாகுளர் ல பிக்செலா ?? மாமா ஏன் இப்படி ஒளரி கொட்டரேழ், லென்ஸ் கு எது பிக்செல், அதுக்கு பேரு focal length

என்ன எழவோ, சொல்லி தொலையேன், எனக்கு ஒரு மண்ணும் தெரிய மாட்டேன்கறது

நா மனசுக்குள் (ஹ்ம்ம், கோமனத்த தலப்பாகா கட்டிண்டு, அரனாகயிறு ல முடிச்சு இல்ல நு சொன்னானாம்) மாமா, நீங்க பார்க்கற திசை மேற்கு, கெழக்கே பாருங்கோ

சரி போன வாரம் நா சொல்லிக்குடுத்த ஸ்லோகத்த சொல்லு பாப்போம், உன் நக்ஷதிரத்துக்கு கிரஹநம் புடிக்கறது, எங்க சொல்லு - ஓம் புஜ கஜ முஜ முகனே போற்றி ...

எனக்கு எங்க சுலோகம் ந்யபகம் இருக்கு, நம்ப அசினோட "டோலு டோலு தான் அடிக்கிறான் ... " சாங் இல்ல பாடிண்டு இருந்தோம், சேரி சமாளிப்போம் நு, நானும் எனக்கு தெரிஞ்ச ரெண்டு மூணு லைன் எடுத்து விட்டேன், மிச்சத்த அதுவே எனக்கும் சேர்த்து சொல்லிடுத்து. மணி ஆறு, கெழத்துக்கு தூக்கம் கண்ணா கட்ட ஆரம்பிச்சுடுத்து - டேய், நா செத்த கட்டாய சாய்கறேன், டைமண்ட் ரிங் தெரியரச்சே என்ன எழுப்பு ... அப்பா முருகா ... அப்படின்னு சொல்லிண்டே தூங்கிடுத்து ,,,

நானும் லூசு மாதிரி பைனாகுளர் வெச்சுண்டு தெருல போற நாயெல்லாம் போகஸ் பண்ணிண்டு இருந்தேன். காலைக்கடன் முடிக்காம வேற போய்ட்டேனா, சட்டுனு வயறு கடா முடா பண்ணிடுத்து, அதே சாக்கா வெச்சுண்டு, மாமாவ மொட்ட மாடில தூங்க வெச்சுட்டு எங்காத்துக்கு வந்துட்டேன், அப்படியே குளிச்சுட்டு, ஆபீஸ் கெளம்பிட்டேன். ஒரு ஒம்போது மணிக்கு கார எடுத்துண்டு வெளிய வரேன், ஆட்டோ ல யாரையோ ஏத்திண்டு ஒரே கூட்டம் ஆட்டோ வ சுத்தி நின்னுண்டிருக்கு, என்னடா நு விசாரிச்சா, வெறும் தரைல கெழம் தூங்கினதுனால, ஒடம்புல சில்ல்நெஸ் ஏறி, மூச்சு விட முடியாம போய்டுத்தாம் கெழத்துக்கு, கிரகணம் பார்க்கணும் நு ஆசப்பட்டாரோனோ, அதான் மேல்லோகத்துக்கு போய், க்ளியரா பார்க்கட்டுமே நு பிளான் பண்ணினேன்.

சாயங்காலம் திரும்பவும் பைனாகுலரோட சுத்திண்டு இருந்ததா கேள்வி, கிரகணம் தேடி இல்ல, என்ன தேடி ;-)

Comments

  1. Asin oda dueta??? hm.. :-)
    Aana pavam antha mama..eppadi panniteengale!!! :-(

    ReplyDelete
  2. Kadaiseela Thattha diamond ring parthaara illaya??

    ReplyDelete
  3. en mama ipdi panrel... pavam neer Asinoda duet pada poi, oru kelam ungalai pei maadiri suthi vara poradhu, parungo... :P

    binocular-a thirumbi vangara nokam iruko illiyo??? seekiram vangittu, diamond ring a parthara illiya nu visaringo.. :-P

    Seriously 4.30 am?? thats wen i go to sleep :D

    ReplyDelete
  4. paavam antha maama.... ippadiya mottamaadili thavikka viduvel!!!!!! suriyanaar kochikka porar, thirunallaru trip irukkonno?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Kadalai Podaradhu Eppadi ??