பப்பி லவ் ...

இந்த ஒரு சம்பவத்தை நான் வெகு நாட்களாக எனது வலையில் பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன், அதற்க்கு தக்க நேரம் இப்பொழுது தான் வந்துள்ளது, இது ஒரு சிறிய கதை போல உங்களுக்கு தோணலாம், ஆனால் இது என் கல்லூரி நாட்களில் நடந்த ஒரு சுவையான நகைச்சுவை அனுபவம். இன்றும் எனது சக தோழர்களின் மனதில் ஆழமாக பதிந்த சம்பவம். நான் நியூயார்க்கில் இருந்த பொழுது எனது கல்லூரி நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது, அப்பொழுது முதலில் தொடங்கிய அரட்டையே இந்த சம்பவத்தை பற்றி தான். சேரி ரொம்ப செந்தமிழ் ல பேசி உங்கள கொல்ல விரும்பல, இதோ நம்ப சாதாரண நடைமுறை தமிழ்லயே பேசுவோம்...

நா படிச்சது சென்னை ராயப்பேட்டை ல இருக்கற "புது கல்லூரி" ல தான், நெறைய சினிமா நக்ஷதிரங்கள உருவாக்கின கல்லூரி நு சொல்லலாம். நா படிச்சது B.Sc PHYSICS, எனக்கு ஒரு அளவுக்கு மண்டைல ஏறின சுப்ஜெக்ட் நா அது PHYSICS மட்டும் தான் நு கூட சொல்லலாம். சென்னை வாசிகளுக்கு எங்க காலேஜ் பத்தி நல்லாவே தெரியும் அதுவும் எங்க காலேஜ் கு எதிர் ல தான் "ஆதர்ஷ் வித்யாலயா" nu ஒரு பெண்கள் படிக்கற பள்ளிக்கூடம், கேட்கனுமா பசங்களோட சேட்டைய ? அநியாயத்துக்கு அந்த பொண்ணுங்கள போட்டு ஓட்டறதே ஒரு சில பசங்களுக்கு வேலை.

நா எப்பவுமே பஸ் ல தான் காலேஜ் கு போவேன், எனக்கு டூ வீலர் ஓட்ட தெரியாது, இன்னிக்கு ஓட்ட தெரியுமான்னு கேடீங்கன்னா, இன்னிக்கும் ஓட்ட தெரியாது. அப்படிப்பட்ட ஒரு ஆசாமிக்கு பஸ்ஸ விட்ட வேற வழி இல்ல. சின்ன வயசுல எல்லா பசங்களுக்கும் இருக்கற அதே "ஹீரோயிசம்" என்கிட்டயும் இருந்துச்சு (அட சத்தியமாங்க, இப்ப தான் நா காமெடியன், அப்போ ஹீரோ தான்), சோ ஓடற பஸ்ல ஏறறது, ஸ்டைல் லா பஸ் பாச நீடறது, கண்டக்டர் ர காட்டு தனமா ஓட்டறது, எல்லாமே எப்போ நா, அந்த ஸ்கூல் பொண்ணுங்க இருகரச்சே மட்டும் தான்.

எல்லாருக்குமே "பப்பி லவ்" நு ஒன்னு கண்டிப்பா இருந்துருக்கும், அதே மாதிரி எனக்கும் ஒன்னு இருந்துச்சு, சேரி "பப்பி லவ்" நா என்ன நு தெரியாதவங்களுக்கு, ஒரு சின்ன இன்பார்மேஷன் "பப்பி லவ்" நா, ஒரு பையனுக்கோ, பொண்ணுக்கோ, அவங்களோட ஆபோசிட் செக்ஸ் மேல ஒருவிதமான ஈர்ப்பு வரும், அது லவ் நும் சொல்ல முடியாது, இன்பாக்சுவேஷன் நும் சொல்ல முடியாது, அது ரெண்டுத்துக்கும் நடுவுல இருகர ஒரு பீலிங் தான் அது, எனக்கு ஒரு பொண்ணு மேல அப்படி இருந்துச்சு. ஆனா ரொம்ப சீக்ரெட்டான "பப்பி லவ்", எனக்கே அது "பப்பி லவ்" நு பல வருஷம் கழிச்சு தான் தெரிஞ்சுச்சு நா பார்த்துகோங்களேன்.

டெய்லி காலேஜ் கு, கலர் கலர் ஆ டிரஸ் பண்ணிக்கிட்டு போவேன், ஆதர்ஷ் ஸ்கூல் விடற டைம் உம், எங்க காலேஜ் விடற டைம் உம் ஒரே டைம் தான், ஸோ கரெக்டா அந்த டைம் கு வெளிய வந்துடுவேன் என் கூடாளிங்களோட, எவளோ பஸ் வந்தாலும் ஏதோ ஒரு சாக்கு சொல்லி, அந்த பொண்ணு ஏறி போகற பஸ் ல தான் போகணும் நு வெயிட் பண்ணி போவேன். இது ஒரு நாள் ரெண்டு நாள் இல்லங்க, ரெண்டு வருஷம் தொடர்ந்த "பப்பி லவ்" , இதுல விஷயம் என்ன நா, எனக்கு அந்த பொண்ணு பேரு கூட என்ன நு தெரியாது, நா தெரிஞ்சுக்கவும் ஆச படல.

எங்க டீம் பஸ் ல ஏறினாலே, எங்களோட கமெண்ட்ஸ் என்ஜாய் பண்ணறதுக்கு ஒரு கூட்டம் இருக்கும் பஸ் ல, நாங்க ரொம்ப நல்ல பசங்க வேறயா, ஸோ கேவலமா எந்த கமெண்ட் உம் அடிக்க மாடோம், சத்தியமா எங்க கமெண்ட்ஸ் வல்கரா இருக்கவே இருக்காது, அதே மாதிரி யார் மனசும் புண் படாம தான் கமெண்ட் அடிக்கணும் நு நா ரொம்பவே ஜாக்கரதையா இருப்பேன். ஒரு கட்டத்துல, பஸ் டிரைவர் அண்ட் கண்டக்டர் எல்லாம் என்னோட திக் பிரெண்ட்ஸ் ஆய்டாங்க நா பாருங்களேன்.

இப்படி நா அடிச்சா பல காமெடி கமெண்ட்ஸ் கு என் "பப்பி லவ்" பிகரும் ஒரு விசிறி ஆனது தான் சூப்பர் டர்னிங் பாயிண்ட், அடிக்கற எல்லா கமெண்ட்ஸ் உம் எங்க செட் பசங்கள பத்தி தான் இருக்கும், எங்கள நாங்களே மானகேடா ஒட்டிபோம், அதுவும் சத்தமா எல்லாருக்கும் கேட்கறா மாதிரி ஒட்டிபோம், குறிப்பா என் பிகர் கு கேட்கறா மாதிரி தான் கமெண்ட் அடிப்பேன், பட் ஒரு வாட்டி கூட அவ மூஞ்சிய நேர் ல பார்த்து பேசினது இல்ல.

ஒரு நாள் என்ன ஆச்சு நா, நாங்க என் செட் ல இருகர ஒரு பையன கச்சா முச்சா நு ஒட்டிக்கிட்டு இருந்தேன், அன்னிக்கு நா full form ல இருந்தேன் நு தான் சொல்லணும், ஸோ பஸ் ல இருந்த எல்லாரும் கை தட்டி சிரிச்சாங்க நா பார்த்துகோங்களேன், அதுல ஒரு பயணி சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு, "தம்பி நீ எல்லாம் சினிமா கு போனா பெரிய ஆளா வருவா" நு சொன்னாரு, அதுக்கும் நா கமெண்ட் அடிச்சேன் "ஐயா, சினிமா கு போனா பெரிய ஆளா வருவேனா என்ன நு எனக்கு தெரியாது, ஆனா கண்டிப்பா இப்போ இருக்கற இதே சைஸ் ல கண்டிப்பா வருவேன்" நு, மொக்க ஜோக் தான் இது, பட் அன்னிக்கு அதுக்கும் எல்லாரும் சிரிச்சாங்க.

இதெல்லாம் என்னோட "பப்பி லவ்" என்ஜாய் பண்ணிருக்கா, ஸோ அடுத்த நாள் என்ன அதே மாதிரி பஸ் ல போறச்சே, அவ "Excuse Me" நு என்ன பார்த்து கூப்டா, உடனே என் கூட இருந்த பசங்க எல்லாரும், "என்ன மச்சி சொல்லவே இல்ல" நு ஒரு கிண்டல் வேற, எனக்கு உள்ளுக்குள்ள அந்த கமெண்ட ரசிச்சேன் நு சொன்னாலும், வெளிய ஒரே பயம், இந்த பொண்ணு ஏன் நம்பள கூப்புடுது, நம்ப எந்த தப்பும் பண்ணலையே நு நெனச்சேன், சேரி இருந்தாலும், ஆம்பளைக்கு தெய்ரியம் தான் அழகு நு எனக்கு நானே சொல்லிக்கிட்டு,"எஸ் சொல்லுங்க" நு சொன்னேன்.

அந்த காலத்துலேயே அந்த பொண்ணு செல் போன் வெச்சுருந்தா, சேரி பசை உள்ள பார்ட்டி போலருக்கு நு நெனச்சுப்பேன், அவ என் கிட்ட தனியா பேசணும் நு சொன்ன, சத்தியமா சொல்லறேன், நா ஆடி போய்டேன், நமக்கு வாய் இருக்கற அளவுக்கு தெய்ரியம் கெடையாது, நா அவங்க கிட்ட சொன்னேன், தனியா என்னங்க பேச போறீங்க, எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லுங்க நு சொன்னேன், அதுக்கு அந்த பொண்ணு சொல்லிச்சு, இல்ல நா உங்கள ஒருத்தருக்கு அறிமுக படுத்தனும், ஸோ நாளைக்கு இதே பஸ் ஸ்டாண்ட் ல நீங்க வெயிட் பண்ணுங்க நு சொல்லிடு போய்டுச்சு.

ஓடி வந்து பசங்க கிட்ட இத சொன்னேன், "மச்சான் அந்த பொண்ணு யாரையோ எனக்கு அறிமுக படுத்தனும் நு சொல்லரா டா, எனக்கு பயமா இருக்கு, ஒரு வேளை அவங்க அப்பா வா இருக்குமோ" நு சொன்னேன், அதுக்கு என் பசங்க சொன்னாங்க, இதுக்கு தான் வாய மூடிகிட்டு கம்முனு வா நு சொன்னோம், நீ தான் பெரிய பருப்பு மாதிரி, பஸ் புல்லா காமடி பண்ணிண்டு வந்த, இப்போ நீ செத்த டி நு சொல்லி, இருகர பயத்த ஜாஸ்த்தி பண்ணி விட்டுடாங்க.

அவ சொன்ன நாளும் வந்துச்சு, நா தனியா போக பயந்துகிட்டு, என் பசங்களோட தான் போனேன்,அவங்க ஒரு பக்கம் இருந்தாங்க, நா இன்னொரு பக்கம் அந்த பொண்ணுக்காக வெயிட் பண்ணினேன். அந்த பொன்னும் அவ கூட ஒரு ஆளும் வந்தாங்க, லைட்டா ஒதறல் எடுக்க ஆரம்பிச்சுது, ஓடி போய்டலாம் நு கூட நெனச்சேன், சேரி ஓடினா அசிங்கமா இருக்கும், நம்ப தான் எந்த தப்பும் பண்ணலையே, எதுக்கு ஓடனும் நு வெயிட் பண்ணினேன். அந்த பொண்ணு கிட்டக்க வந்து "ஹாய் சதீஷ், இவரு தான் என் ஹஸ்பெண்டு முரளி" நு அறிமுக படுத்திட்டு, உங்க கமெண்ட்ஸ் எல்லாத்தையும் நா டெய்லி ஈவினிங் பொய் முரளி கூட ஷேர் பண்ணிப்பேன், நல்லா விழுந்து விழுந்து சிரிப்போம் ரெண்டு பேரும், u have got a terrific sense of humour" நு சொன்னா. ஒ தேங்க்ஸ் நு அசடு வழிஞ்சுட்டு நின்னேன்.

என்ன பார்க்கணும் நு இன்னிக்கு முரளி ஆபீஸ் லீவ் போட்டார் நு ஒரு குட்டி தகவலும் சொல்லிட்டு, வாங்க சதீஷ் எல்லாரும் சேர்ந்து போகலாம் நு சொல்லி, எல்லாரும், ஒரு பஸ் ல ஏறி போனோம். என்ன தான் என் "ப்பி லவ்" இப்படி ஆய்டுச்சே நு வருத்தம் இருந்தாலும், அந்த பொண்ணு "ஆதர்ஷ் வித்யாலயா" ல கணக்கு டீச்சர் நு சொன்னா பாருங்க, அங்கேயே நாங்க எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சிருக்கோம், அவங்க ரெண்டு பேருக்கும் நாங்க ஏன் சிரிச்சோம் நு இன்னி வரைக்கும் தெரியாது.

ஆளு பார்க்க கொஞ்சம் குள்ளமா இருந்த உடனே எப்படி மச்சி நீ ஸ்டுடென்ட் நு நெனச்ச ? நல்ல வேளை நீ வேற எதுவும் பேசல அவங்க கிட்ட, மகனே வேற ஏதாவது சொல்லிருந்த, அதே முரளி உன்ன இன்னிக்கு கொல்ல வந்துருபாறு நு பசங்க கிண்டலடிச்சாங்க. ஆனா உண்மை என்ன நா, ஆதர்ஷ் வித்யாலயா ல 11th & 12th கு யூனிபார்ம் கிடையாது, கலர் டிரஸ் தான், ஸோ அங்க தான் நா டீச்சர் கும் ஸ்டுடென்ட் கும் confuse ஆய்ட்டேன்.

இப்போ அதே சம்பவத்த 14 வருஷத்துக்கு அப்பொறம் எல்லாரும் நியூயார்க் ல ஒரு ஹோட்டல் ல நினைவு படுத்தி பேசினோம், it took all of us back to 1994. ஆயிரம் தான் இருந்தாலும், காலேஜ் லைப் காலேஜ் லைப் தான். அப்போ எங்க எல்லார் கிட்டயும் சேர்த்து பத்து ரூபா இருந்தா பெரிய விஷயம், பட் எங்க கிட்ட சந்தோஷம் இருந்துச்சு, இப்போ எல்லார் கிட்டயும் லக்ஷ லக்ஷமா காசு இருக்கு, பட் அந்த சந்தோஷம் மட்டும் இல்ல.

Comments

  1. Kadaciya sonnathu roombhave seri :-)

    ReplyDelete
  2. உங்கள் டெம்பிளேட் மிகவும் அருமையாக உள்ளது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

SPB 1000 - Finally