கவிதைகள் மூன்று

பணம்

கணவன் சம்பாதித்து தந்த முதல் ஐந்து ரூபாய் காசு
டீத்தூளும், சக்கரையும் வாங்கணும் மாமா ...
இஞ்சியும், மிளகாயும் வாங்கி தொவையல் பண்ணு புள்ள
முதல் சம்பளம், இனிப்பா இருக்கட்டும் மாமா, காரமா வேண்டாம்
அது பிணத்தின் நெற்றியில் இருந்து எடுத்தது என்று எப்படி சொல்வது ?

வேலை

படித்தது அனைத்தும் நினைவில் நிறுத்தியபடி
விரைவாக சென்றாள் பூங்கொடி, தேர்வு மையத்திற்கு
வேலை கிடைத்தால் மட்டுமே வீடு திரும்பும் எண்ணத்தோடு
கால் கடுக்க சுட்டெரிக்கும் வெய்யிலில் காத்திருந்து
கருகித்தான் போனது அவள் கூந்தலில் குடியேறிய பூச்சரம்
அவளின் பக்குவமான அழகு, அமைச்சரின் கண்களை உறுத்தியது
கேள்வியே இல்லாமல் தேர்வடைந்த காரணம் தெரியாமல்
குளிர் பானமும், குளுகுளு வண்டியில் ஏறியதும் நினைவில் நின்றது
ரத்தம் கசிந்த அவளது ஆடையும், அடிவயிற்றில் ஏற்பட்ட வலியும்
அவள் தேர்வடைந்த காரணத்தை ஆதாரத்துடன் உரைத்தது.

கேள்வி

கையில் வாங்க மறுத்து, கண்கள் பார்க்க மறுத்து
மேனி வருட மறுத்து, உச்சி நுகர மறுத்து,
வாரி அணைக்க மறுத்து, முத்தம் பதிக்க மறுத்து,
தோளில் சுமக்க மறுத்து, மொத்தம் முழுவதுமாய் வெறுத்து,
தூக்கி எறியப்பட்ட பிஞ்சு சிசு, நர்சின் முகம் பார்த்து சிரித்தது
நானா அம்மாவை முழுங்கிய பிசாசு ?

Comments

  1. Mudiyala Sat ! Each of them is so poignant and reaches your heart straight!
    Very well written

    ReplyDelete
  2. சதீஷ்....

    இன்னும் அக்னி நட்சத்திரம் வரவில்லையே அதற்குள்.... :)

    நல்ல முயற்சி,தொடருங்கள்.

    ReplyDelete
  3. wow!!! very nice. But why only sad ones, y not something romantic or energetic ;)

    ReplyDelete
  4. கவிதைகள்
    முதல் ஒன்று
    ஐந்து ருபாய் நாணயம் எப்பொழுதிலிருந்து தம்பி
    பிணத்தின் நெற்றியில் வைக்கிறார்கள்?.
    அப்படியாவது 'கள்'ளானாலும் கணவன்
    'புல்'லானாலும் போட்ட புருஷன்
    கை மாற்றாக கொண்டாந்த காசு
    கடிக்கவா செய்யும்?
    .........................
    இரண்டாவது ரொம்ப நிதர்சனமான உண்மை , அடிவயிற்றை பிசைகிறது.
    .................'
    முன்றாவது ,
    இருட்டினிருந்து வந்த சிசு
    வெளியே வந்து பார்த்த சிசு
    பயந்து கொண்டே கேட்ட சிசு
    என் மனதைத் தொட்ட சிசு !

    ReplyDelete
  5. sisuk kavithai..........pidiththathu!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Madras Tamil in IT Industry