என்றும் அன்புடன் ...

நீ பிறந்த நாளை என் வாழ்வில் என்றுமே மறக்க இயலாது. ஆம், என்னையே என் கைகளில் நான் ஏந்திய நாள் அது. பிறந்த களைப்பில் இருந்தாய் நீ, நீ பிறந்த களிப்பில் இருந்தேன் நான். சுருங்கிய உன் தேகத்தை வருடியது என் விரல்கள், மலரை விடவும் மிருதுவாக இருந்தாய் நீ. உன் இரு கைகளையும் இருக்க மூடியிருந்தாய், அதில் ஒரு பிஞ்சு விரலை பிரித்து பார்த்தேன் நான், கடவுள் நான் விரும்பிய சந்தோஷத்தை உன்னிடம் கொடுத்து அனுப்பியது தெரிந்தது...

உன் உச்சி முகர்ந்து முத்தம் இட்ட பொழுது, என்னையும் அறியாமல் சிந்திய கண்ணீர் துளி ஒன்று, உன் உறக்கத்தை கலைத்தது, முதன் முதலாய் நாம் இருவரும் கண்களால் பேசிக்கொண்ட தருணம் அது. கடவுள் உன்னை எனக்கு பரிசாக அனுப்பியதாக கூறினாய் நீ, என் கடவுளே நீ தான் என்று கூறினேன் நான். நாம் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் தவித்தது மௌனம். பசி எனும் கொடிய அரக்கன் உன்னை தாக்கியதில், கலந்தது நம்முள் நடந்த மௌன கருத்தரங்கம்.

மண்ணில் விழுந்த எதுவும் வளர்வது தானே இயற்கையின் விதி, நீயும் வளர்ந்தாய், அரும்பாக, அதுவும் மிக குறும்பாக. உன்னை துரத்தி துரத்தி ஊட்டிய சோற்றில், நீ பெருக்கவில்லை என்றாலும், நான் இளைத்துவிட்டேன். ஒரு பட்டாம்பூச்சியின் வளர்ச்சியை புத்தகத்தில் மட்டுமே படித்த எனக்கு, அதை நேரில் காணும் பாக்கியத்தை அளித்தவள் நீ. உன்னால் எனக்கு கிடைத்த நண்பர்கள் பலர், தெரு முனையில் உள்ள தாயில்லா நாயும், மூன்று காலில் மட்டுமே நடக்கும் சாம்பல் நிற பூனையும், கூப்பிட்டால் மரம் இறங்கி வந்து பழம் வாங்கி செல்லும் அணில் அண்ணனும் இதில் அடக்கம்.

உன் பிஞ்சு பாதங்கள் முதன் முதலாய் இந்த பூமியில் பதிய தொடங்கிய பொழுது, இந்த பூமி முழுவதும் பூக்கள் நிரப்ப ஆசைப்பட்டவன் நான். நடை பழக "நடை வண்டி" இருந்தும், என் விரல் பற்றி நடக்கவே நீ ஆசை படுவாய், என் மேல் நீ வைத்திருந்த நம்பிக்கையின் முதல் சான்று அது. உன் பிஞ்சு பாதங்களை அலங்கரித்த அந்த காலணியில் இருந்து எழும் "கீ கீ" ஓசையை அதிசயமாக பார்த்த நீ, அதே "கீ கீ" ஓசை ஏன், என் காலணியில் வரவில்லை என்று குழப்பமாக நீ பார்த்த அந்த பார்வையை, இன்றும் என் மனத்திரையில் சேமித்து வைத்துள்ளேன்.

உன்னை முதன் முதலில் பள்ளிக்கு கூட்டிக்கொண்டு போய் விட்ட பொழுது, நீ அழுததை விட, நான் கண்கலங்கியதை தான் அனைவரும் பார்த்து சிரித்தனர். உன் வகுப்பு ஆசிரியையிடம் உன்னை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு செல்கையில், என் கண் முன் தோன்றிய கண்ணீர் திரை என்னையும் அறியாமல் உடைந்து தெறித்தது. உன் பள்ளிக்கூடத்தின் வாயிலை கடக்கும் முன், உன் அழுகுரல் சத்தம் கேட்டு தலை தெறிக்க ஓடிவந்த என்னை, அதே வேகத்தில் நீயும் ஓடி வந்து கட்டிக்கொண்ட பொழுது, ஆசிரியை விட, என் மேல் நீ வைத்திருந்த நம்பிக்கையின் இரண்டாம் சான்று அது.

கருப்பு நிற பேனா ஒன்றுக்கு நீ ஆசை பட்ட பொழுது, அதன் விலை என் வறுமையை சோதித்து பார்த்தது, உன் முகத்தில் காணும் சந்தோஷத்திற்கு என் ஒரு வேளை உணவை ஒத்திவைத்தேன் நான், அதுவும் ஒரு வாரத்திற்கு. அந்த கருப்பு நிற பேனாவை உனக்கு கொடுக்க வேண்டும் என்று, அலுவலகத்திலிருந்து விரைந்த என்னை, எங்கோ ஒளிந்திருந்த பசியின் மயக்கம், ரயில் நிலையத்தில் என்னை உலுக்கி போட்டது, என்னை மீண்டும் துளிர்த்தெழ செய்தது, என் மனத்திரையில் மின்னி சென்ற உன் சிரித்த முகம். அன்று நீ எனக்களித்த முத்தங்களை எண்ண மறுத்து உணவின்றி தவித்த என் மூளை.

உன் பள்ளியின் நண்பர்கள் பலர் நம் நட்பை பார்த்து வியந்து போவதை, சிரிப்பும், பெருமையும் பொங்க நான் கேட்டுக்கொண்ட தருணங்கள் எத்தனை எத்தனை. உனக்கு ஒருவன் காதல் கடிதம் எழுதிய பொழுது, அதை நீ என்னிடம் படித்து காட்டி, அதில் இருந்த எழுத்து பிழைகளை எண்ணி எண்ணி சிரித்ததை, கண் கொட்டாமல் பார்த்து ரசித்தவன் நான். அந்த சிறுவனுக்கு, தக்க பதில் கடிதம் எழுதித்தருமாறு என்னை கேட்டுக்கொண்ட பொழுது, உன் வாழ்கையை என்னை விட வேறு யாரும் நல்ல முறையில் தீர்மானிக்க இயலாது என்று, நீ என்னை நம்பிய மூன்றாவது தருணம் அது.

உன் பரீட்ச்சை அட்டையில் நான் தான் முதலில் பிள்ளையார் சுழி போட வேண்டும், உன் புது பேனாவில் நான் தான் முதலில் மை ஊற்ற வேண்டும், உன் புத்தாடையை நான் தான் என் கையில் எடுத்து உனக்கு தர வேண்டும், நீ எங்கு வெளியே செல்லும் போதும், நான் தான் உனக்கு எதிரில் வர வேண்டும், நீ உண்ணும் பொது, உனக்கு முதல் வாயை நான் தான் ஊட்ட வேண்டும், நீ உறங்கும் முன், என் முகத்தை தான் கடைசியாக நீ பார்க்க வேண்டும், நீ எழும் போதும் என் முகம் தான் உனக்கு முதலில் தெரிய வேண்டும், இவை தான் நீ என்னிடம் கேட்டு வாங்கிய சத்தியங்கள்.

காலத்தின் வேகத்திருக்கு தடை போட யாரால் இயலும் ? என் கண் முன்னே குமரியாய் நீ வளர்ந்து நின்றதை நம்பத்தான் முடியவில்லை என்றாலும், என் நரைத்த தலையும், முழுவதுமாக புடைத்த கை நரம்புகளும் அது உண்மை தான் என்று ஊர்ஜீனம் செய்தது. முன் போல் என்னிடம் நீ பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லையே என்ற வேதனையை என்னுள்ளே புதைத்து கொண்டேன். நாம் இருவரும் ஒருவரை ஒருவர் கண் பார்த்து பேசிக்கொள்ளும் தருணங்கள் குறைந்து விட்ட காரணத்தை யோசிக்க தொடங்கியது இந்த கிழ மனது.

நம் இருவருகிடையில் அதிகம் பேசிய வாக்கியங்கள் "ஹ்ம்ம்", "சரி", "ஆம்", "இல்லை" போன்ற ஒற்றை சொற்களாக சுருங்கின. ஏனோ என் உலகம் ஒரு வெறுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக துடித்தது மனது. அது நான் உன்னை நிரந்திரமாக பிரிய போகிறேன் என்ற உள்ளுணர்வின் வெளிப்பாடு என்று நான் அன்று உணரவில்லை. வாழ்க்கையில் என்றுமே என்னை நம்பிய நீ, உன் வாழ்க்கை துணையையும் நல்ல முறையில் தேர்ந்தெடுப்பேன் என்று நீ நம்பாமல் போனது ஏன் ?

என்றாவது நீ என்னை பார்க்க வருவாய் என்ற நம்பிக்கையில், என் இரு கண்களும் வெளிச்சத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறது, செவி ஒலிகளை கிரகித்துகொண்டிருக்கிறது, உடல் உயிரை சுவாசித்து கொண்டிருக்கிறது, இவை யாவும் அடங்கும் முன், யாருக்கும் கேட்காமல், என்னிடமாவது சொல், ஏன் என்னை விட்டு பிரிந்தாய் நீ ? நான் செய்த தவறு தான் என்ன ?

என்றும் அன்புடன் ...

Comments

  1. Roooooombha nalla irukku!!!!
    I think this is the best of your write-ups till now(At least of the little i have read)

    Toooo good...i enjoyed reading :-)

    ReplyDelete
  2. @Shylu - Thanks a lot. I still could have written this better is what is my feeling. But took a lot of time to finish this.

    ReplyDelete
  3. super. It is so touching. I know you would have taken lot of time for this. How much you took?

    ReplyDelete
  4. Thank God ! A superb write-up from your end. Kanla oru Oramaa Thanniye Vandhu Vittadhu :).

    ReplyDelete
  5. You should send this to some magazine...romba nalla irukku
    I could predict the ending...but the way it has been written is too good :)
    kalakkite po :)

    ReplyDelete
  6. tat was an awesome post mate..i missed this for so long..touchin one...

    ReplyDelete
  7. Anonymous8:19 PM

    very super pa....... this is very serious and heart pain stroy also... i love my father & mother also very much...i must remeber it also in my life alone this stroy.i want to sent a one request all boys&girls. boys plz permit ur wife to take care about her parents.girls dont forget u have already two set of children(ur parents&ur husband's parents) god is super creater. god give to parents u in the form of child & return HE give childerns hand their parents in the form of love wanted children(ie mean ur parents)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Madras Tamil in IT Industry