மும்பை கவிதைகள்
கணவன் முதன் முதலாக வேலைக்கு செல்லும் நாள்
வரம் கொடுத்த தெய்வத்தின் பாதத்தில் அவள்
நெஞ்சில் பாரமும், மனதில் பீதியுமாய் அவன்
அரவணைப்பாய் அவனை மார்பில் ஏந்தினாள் அவள்
கண்ணில் கண்ணீருடனும், புரியாத சோகமுமாய் அவன்
முதல் வேலையின் பதட்டம் என்று நினைத்தாள் அவள்
விடை பெற மனம் இல்லாமல், உச்சி நுகர்ந்தான் அவன்
கை அசைத்து வழி அனுப்பி வைத்தாள்
"மனித வெடிகுண்டாக" மும்பை செல்லும் தன் கணவனை
***************************************************************
பரபரப்பாக துவங்கியது மற்றுமொரு எந்திர காலை
நேற்றிரவு அவள் கன்னத்தில் அறைந்த வலி அவன் கையில்
அலுவலகம் செல்லும் பரபரப்பில் அந்த வலி மறந்தாள் அவள்
கண்களால் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தான் அவன்
கணவனின் வாயிற்று பசி போக்க மதிய உணவை நீட்டினாள் அவள்
அவனின் உடல் பசியை போக்காததர்க்கு கையை நீட்டினான் அவன்
இன்றிரவு அதையும் போக்க தயார் என்றாள் அவள்
விரைவாக வீடு வந்து காத்திருந்தான் அவன், ஆவலுடன்
மனைவியாக வர வேண்டியவள், செய்தியாக வந்தாள்
குண்டு வெடிப்பில் உடல் சிதறி செத்தவர்களின் பட்டியலில்
Comments
Post a Comment