Skip to main content

ஐயோ ... ஐயோ ...

போதும் டா சாமி, இந்த ப்ராஜெக்ட் மேனேஜர் லூசுங்களோட மாரடிச்சது போதும், இதுக்கு மேலயும் இந்த பாடி தாங்காது. ஒரு மனுஷன் முட்டாளா இருக்கலாம் தப்பு இல்ல, ஆனா முட்டாளாவே இருக்கான் பாருங்க அது தான் தப்பு, அதை விட பெரிய தப்பு என்ன தெரியுமா, தான் முட்டாளா இருக்கோம் நு தெரியாமையே முட்டாளா இருக்கறது. அப்படி பட்ட ஒரு லூசுக்கு ரிப்போர்ட் பண்ணற ஆள் தான் இந்த போஸ்ட்டுக்கு சொந்தகாரன். என் மேனேஜர் பண்ணின, பண்ணற கூத்த தான் இப்போ உங்களுக்கு சொல்ல போறேன். ஒரு வார்னிங், தயவு செஞ்சு இத பக்கத்துல யாரும், குறிப்ப மேனேஜர் இல்லாத போது படிங்க. ஒரு லூச பத்தி தப்பா பேசினா இன்னொரு லூசுக்கு எப்படி பிடிக்கும் ?

காட்சி - 1
நேரம்: எனக்கு போறாத நேரம்
இடம்: கக்கூஸ் (bathroom)

சதிஷ் சூ சூ போய்விட்டு, தன் அழகான திரு முகத்தை, அந்த அசிங்கம் புடிச்ச கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றான், பக்கத்துக்கு கக்கூசில் இருந்து லூசு தன் ஜிப்பை போடா முடியாமல் போட்டுக்கொண்டு வெளியே வந்தது.

வெளியே வந்த லூசு, தன் கையில் வழிய வழிய ஒரு திரவத்தை கொட்டிக்கொண்டு, பாறை போல் வெடித்து கிடக்கும் தன் முகத்தில் நீர் தெளித்து, சூரியனை சுற்றி வரும் பூமியைபோல், தன் கையால் தன் முகத்தை சுற்றி சுற்றி அலம்பிக்கொண்டது, அப்படி அலம்பிக்கொள்ளும் வேளையில், சாக்கடை குத்தும் கம்பியால் முகத்தில் அடி வாங்கிய பெருச்சாளியை போல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கிக்கொண்டு, என்னை பார்த்து கேட்டது

என்ன சதீஷ், இந்த புது "face wash" பழைய "face wash" மாதிரி நுரையே வர மாட்டேன்குது, ஆனா வாசனை மட்டும் நல்லா இருக்கு. என்ன வாங்கறாங்களோ, அட்மின் ல ரிப்போர்ட் பண்ணனும். என்று சொல்லிக்கொண்டே, மீண்டும் அந்த ஒற்றை கண்ணை மூடிக்கொண்டு, நுரை வராத அந்த திரவத்தை தன் பலம கொண்டு தேய்த்து நுரை வர வைத்தது, முகத்தில் அல்ல, தன் வாயில். அப்படியே மூடிய கண்ணோடு, குழாய் எங்கு உள்ளது என்று தெரியாமல் அந்த வாஷ் பேசினுக்கு தீபாராதனை காட்டுவது போல், கையை காற்றில் மூன்று முறை சுத்தியது, பின்னர் ஏதோ ஒன்று குழாயின் குப்பி போல் தென்பட, படக் என்று அதை ஒரு முறுக்கு முறுக்கியது, பின்னர் தான் அதன் புத்திக்கு எட்டியது, அது குழாய் என்று நினைத்து திருப்பியது, தன் குழாயை அல்ல, பக்கத்துக்கு வாஷ் பேசின் குழாயை என்று, அதுவும் அதில் வேறு ஒரு நபர் முகம் அலம்பும் பொழுது. பின்னர் தட்டு தடுமாறி, முகத்தை அலம்பிக்கொண்டு தன் திருமுகத்தை கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டது, தனக்கு தானே ஒரு சிரிப்பு சிரித்துக்கொண்டது.

எனக்கோ எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை, ஆனால் சொல்லாமலும் இருக்க என் மனம் ஒப்பவில்லை, அதே சமயம், இதை அப்பொழுதே சொல்லாமல் ஏன் இப்பொழுது சொல்கிறேன் என்று எரிந்து என் மேல் விழுந்தாலும் விழும், என்ன செய்வதென்று அறியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தேன், இருந்தாலும் மனதில் ஒரு தெய்ரியத்தை வரவழைத்துக்கொண்டு சொன்னேன் - பாஸ், நீங்க "face wash" நு நினைச்சுகிட்டு மூஞ்சிய அலம்பிநீங்களே, அது "face wash" இல்ல பாஸ், அது வெறும் "Hand Sanitizer" அதான் உங்களுக்கு நுரை வரல. சொல்லி முடித்த பின், லூசின் முக ரேகைகளை பார்க்க சகிக்கவில்லை. ஒ அது தான் மூஞ்சி எல்லாம் ஒரே எரிச்சலா இருக்கா என்று கேட்டுக்கொண்டு, மீண்டும் ஒரு முறை நீரில் தன் பாறை போன்ற முகத்தை அலம்பிக்கொண்டது, அப்பொழுது கக்கூசில் எழுந்த சிரிப்பலையை கேட்க பொறுக்காமல், "automatic hand drier" எந்திரத்தை ஒ ஒ ஒ ஒ என்று அலற விட்டது.

காட்சி 2
நேரம்: லூசுக்கு போறாத நேரம்
இடம்: அலுவலகம்
சமயம்: ethinic day

ஊரே அம்மணமாக அலையும் பொழுது நாம் மட்டும் வேட்டி சட்டை அணிந்தால் எப்படி ? அதனால் தான் அனைவரும் அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து வரும் வேளையில், லூசும் தன் பாரம்பரிய ஆடை அணிந்து கொண்டு வர ஆசைப்பட்டது, ஆசைப்பட்ட படியே அணிந்து கொண்டும் வந்தது, பாவம் தன் வாழ்க்கையில் தனக்கு ஒரு கேவலமான பட்ட பெயரை அந்த ஆடை அவருக்கு பெற்று தரும் என்று தெரியாமல். லூசு பிறந்தது, லூசாகவே வளர்ந்தது, லூசு போல் படித்தது அனைத்துமே, பால் தாக்ரே போன்ற மகா லூசு வாழும் மராட்டிய மண்ணில் தான். எனக்கு இது போன்ற நாட்களில் எல்லாம் நம்பிக்கை கிடையாது, ஆகவே நான் என் வழக்கமான ஜீன், டி-ஷிர்டில் தான் அலுவலகம் சென்றிருந்தேன். அப்படி ஒரு சாதாரண கோலத்துடன், நான் அலுவலகத்தினுள் கால் வைக்கும் நேரம், வீ ஜி பீ வாசலில் வாளுடன் கண் சிமிட்டாமல் பயமூர்த்தும் படி நிற்பாரே ஒரு மனிதர், அப்படி ஒருவன் என்னை வழி மறித்து "என்ன கொடுமை சரவணன் இது" போன்ற பீலிங் விட்டான். நான் ஒரு நிமிடம் அது யார் என்று கண்டுகொள்ள முடியாமல் திணறினேன்.

சிகப்பு நிற அங்கி, நெஞ்சு முதல் *ஞ்சு வரை ஒரே நிறத்தில் ஆனா ஒரு மேலாடை, இடுப்பின் கீழ் மஞ்சள் நிற சாயத்தில், மாவு மிஷன் க்கு போர்த்திய துணி போல் தொள தொள வென்று ஒரு கீழாடை, முகத்தில் அசிங்கமாக ஐ ப்ரொவ் பென்சில் கொண்டு, நடுங்கும் கையால் வரையப்பட்ட ஒரு மீசை, அதவும் காது வரை நீட்டிக்கப்பட்டது. இவை போதாதென்று, வலது பக்க இடுப்பில் அம்பட்டன் பயன் படுத்தும் அளவில் ஒரு கத்தியும், இடது புற இடுப்பில், காயலான் கடையில் திருடி வந்தது போல், துரு பிடித்த ஒரு வாளும் சொருகிய நிலையில் இருந்த அந்த மாமனிதன், சாட்ஷாத் என் இனிய லூசே தான்.

பார்த்தவுடன் வெளி வந்த அதிர்ச்சியையும், பொங்கி வந்த சிரிப்பையும் அடக்கிக்கொண்டு, அவருக்கு தான் இன்று சிறந்த ஒப்பனையாளர் பரிசு கிடைக்கும் என்று வாய் கூசாமல் ஒரு பொய்யை சொல்லி விட்டு, என் இருக்கைக்கு வந்து, எனது இருக்கையில் அடியில் சென்று, கையில் இருந்த கைக்குட்டையை வாயில் திணித்து, கண்களில் நீர் வர பொங்கி வெடித்து சிரித்து தீர்த்தேன். என் விதியின் கொடுமையால், எனது இருக்கைக்கு பக்கத்து இருகை தான் என் லூசு வாழுமிடம், போட்டுக்கொண்ட வேஷத்துடன், அது என் இருக்கை அருகில் வந்து நின்று கொண்டது, நின்ற படியே ஒரு குண்டை போட்டு உடைத்து, அதாவது, தன்னால் இன்று முழுவதும் இருக்கையில் உட்கார இயலாது என்றும், போட்டி முடிந்த பின் மாற்றிக்கொள்ள வேறு ஒரு மாற்று உடை கொண்டு வரவில்லை என்றும், மாலை வேளையில் தான் ஆடோவில் தான் செல்ல வேண்டும் என்றும் கூறியது.

லூசால் ஏன் உட்கார முடியாது ? - லூசு அணிந்து வந்த உடை ஒரு ரெடி மேட் உடை, அதில் உடை வாள்களை தனியாக கழற்றி வைக்கும் வசதி கிடையாது, ஆகவே, லூசு உட்கார முற்ப்பட்டால், லூசில் இடது பக்கம் நீண்டி வளர்ந்துள்ள பெரிய வாளானது, அதற்க்கு முன்னால் முந்திக்கொண்டு தரையை குத்தி நிற்கிறது, ஒரு முறை அது தெரியாமல் லூசு உட்கார முர்ப்பட்டதில், பட கூடாத இடத்தில, அந்த வாளின் கைப்பிடி குத்தி வெளியே சொல்ல முடியாத வலி ஏற்ப்பட்டதையும் ஒளிவு மறைவு இல்லாமல் என்னிடம் பகிர்ந்து கொண்டது. அது வேறு மாற்று உடை கொண்டு வராதது மறதியின் காரணமாகவும், மாலை தனது மனைவி அவரின் காரை ஓட்டி செல்வதால், தான் அதே வேஷத்துடன் ஆடோவில் செல்ல வேண்டும் என்றும் விவரித்து. இத்துடன் கூத்து நிறைவடைந்திருந்தால் அவருக்கு அந்த பட்ட பெயர் வந்திருக்காது, ஆனால் அவரை சோதிக்க வந்தது நமது பெங்கலூரூவின் அடையாளமான நாய்கள்.

பார்த்தவுடன் வெளி வந்த அதிர்ச்சியையும், பொங்கி வந்த சிரிப்பையும் அடக்கிக்கொண்டு, அவருக்கு தான் இன்று சிறந்த ஒப்பனையாளர் பரிசு கிடைக்கும் என்று வாய் கூசாமல் ஒரு பொய்யை சொல்லி விட்டு, என் இருக்கைக்கு வந்து, எனது இருக்கையில் அடியில் சென்று, கையில் இருந்த கைக்குட்டையை வாயில் திணித்து, கண்களில் நீர் வர பொங்கி வெடித்து சிரித்து தீர்த்தேன். என் விதியின் கொடுமையால், எனது இருக்கைக்கு பக்கத்து இருகை தான் என் லூசு வாழுமிடம், போட்டுக்கொண்ட வேஷத்துடன், அது என் இருக்கை அருகில் வந்து நின்று கொண்டது, நின்ற படியே ஒரு குண்டை போட்டு உடைத்து, அதாவது, தன்னால் இன்று முழுவதும் இருக்கையில் உட்கார இயலாது என்றும், போட்டி முடிந்த பின் மாற்றிக்கொள்ள வேறு ஒரு மாற்று உடை கொண்டு வரவில்லை என்றும், மாலை வேளையில் தான் ஆடோவில் தான் செல்ல வேண்டும் என்றும் கூறியது.

லூசால் ஏன் உட்கார முடியாது ? - லூசு அணிந்து வந்த உடை ஒரு ரெடி மேட் உடை, அதில் உடை வாள்களை தனியாக கழற்றி வைக்கும் வசதி கிடையாது, ஆகவே, லூசு உட்கார முற்ப்பட்டால், லூசில் இடது பக்கம் நீண்டி வளர்ந்துள்ள பெரிய வாளானது, அதற்க்கு முன்னால் முந்திக்கொண்டு தரையை குத்தி நிற்கிறது, ஒரு முறை அது தெரியாமல் லூசு உட்கார முர்ப்பட்டதில், பட கூடாத இடத்தில, அந்த வாளின் கைப்பிடி குத்தி வெளியே சொல்ல முடியாத வலி ஏற்ப்பட்டதையும் ஒளிவு மறைவு இல்லாமல் என்னிடம் பகிர்ந்து கொண்டது. அது வேறு மாற்று உடை கொண்டு வராதது மறதியின் காரணமாகவும், மாலை தனது மனைவி அவரின் காரை ஓட்டி செல்வதால், தான் அதே வேஷத்துடன் ஆடோவில் செல்ல வேண்டும் என்றும் விவரித்து. இத்துடன் கூத்து நிறைவடைந்திருந்தால் அவருக்கு அந்த பட்ட பெயர் வந்திருக்காது, ஆனால் அவரை சோதிக்க வந்தது நமது பெங்கலூரூவின் அடையாளமான நாய்கள்.

ஒரு வழியாக நின்று கொண்டே அன்றைய பணிகளை செப்பனே முடித்துவிட்டு, தனக்கு சிறந்த ஒப்பனையாளர் பரிசு கிடைக்காத சோகத்தில், அந்த வண்ண வண்ண ஆடைகளுடன், ஆட்டோ பிடிக்க வெளியே சென்றது லூசு. கொஞ்சம் யோசித்து பாருங்கள், ஐப்ரோவில் வரையப்பட்ட ஒரு பட்டை மீசை, இடுப்பில் இரண்டு வாள்கள், தோளில் "DELL" என்று போடப்பட்ட ஒரு தொடை கணினி, இந்த ரூபத்தில் ஒரு உருவம் நின்றால் எந்த நாய்க்கு தான் பார்க்க வேண்டும் என்று ஆசை வராது ? ஐந்து நிமிடத்தில் அவரை சுற்றி வளைத்து பதினைந்து நாய்கள். அவைகளுக்கு என்ன தெரியும், நிர்ப்பது நிஜமான சத்ரபத்தி சிவாஜி அல்ல, ஸ்ரீ கோபுல வேங்கட நும்புரி பாலாஜி என்று (அது தான் அவரது இயற்பெயர்). இப்படி மார்கமாக நின்றுகொண்டிருந்த நமது மேனேஜர்ஐ பார்த்து மரியாதை இல்லாமல் குறைத்தன அனைத்தும், அதில் சற்றே உதறல் எடுத்த நமது மேனேஜர், மேலும் பதற்றத்துடன் ஆட்டோவை அழைத்தார், அவர் போறாத நேரம், ஒன்றும் சிக்கவில்லை.

பொருத்து பொருத்து பார்த்த நாய்களில் ஒன்று பொங்கி எழுந்தது, ஒரே பாய்ச்சலில், அவரின் கீழாடையில் தொங்கிக்கொண்டிருந்த பச்சை நிற நாடாவை ஒரே கடியில் உருவிச்சென்றது. நாடகத்தின் முடிவில் விழும் திரையை போல், லூசின் மானமும் விழுந்தது அப்பொழுது தான், நாடா இல்லாத அந்த கீழாடை, அவரின் அந்தரங்கத்தை உலகிற்கு காட்டிவிட்டது, பதறி அடித்துக்கொண்டு விழுந்த அந்த நாடா அற்ற கீழாடையை , பள்ளியில் "sack race" ஓட தயாராக இருக்கும் குழந்தையைப்போல் தன் இரு கைகளாலும் தூக்கி பிடித்த நிலையில், நாடாவை உருவிக்கொண்டு போன நாயை சபித்தபடியே முனுமுனுத்துக்கொண்டிருந்தது அவரது வாய். கைகளை ஆட்டி ஆட்டோ கூபிடக்கூட முடியாத நிலையில் நின்று கொண்டிருந்தது நமது லூசு. கையை கீழாடையில் இருந்து எடுத்தால் மானம் போய்விடும், கால் ஆட்டி ஆட்டோவை அழைக்க முடியாது, சத்தம் போட்டு "ஆட்டோ" என்று கூப்பிட்டால் அது நாகரீகம் அல்ல, ஆகவே கண்களால் ஆட்டோவை கூப்பிட திட்டமிட்டார். அந்த அந்தி மசங்கிய வேளையில், இப்படி ஒரு மார்கமாக உடை அணிந்து, ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டு, கண்களால் ஒரு ஆண், இன்னொரு ஆணை அழைத்தால், அதுவும் இப்பொழுது சட்டமாக்கப்பட்ட 377 பிரிவு வந்த பிறகு, எந்த ஆட்டோ காரன் தான் நிறுத்துவான் சொல்லுங்களேன் ?

இப்படி தன் மாநிலத்தின் மானம் காக்க, நாய்களுடன் போராடி தன் மானத்தை இழந்த நம் அன்பிற்குரிய மேனேஜர், அன்று முதல் "*ஞ்சு காத்த கோமான்" என்று புகழ் பெற்று இன்றும் விளங்காமல் இருக்கிறார். இதோ, நாளை மீண்டும் அவர் முகத்தில் தான் முழித்தாக வேண்டும், மீண்டும் ஒரு "ethinic day" வரும் என்றும், அதில் வென்றே தீருவேன் என்ற வெறியும், அவர் கண்களில் மின்னிக்கொண்டு தான் இருக்கிறது.

Comments

  1. lol.. sema sir.. vivarichu getha yezhutheirukeenga..manager padika kudathunu tamizh la yezthurukeengala??and yelam poratha nerathala nadandhadha..lol gethu ponga..venanda sami intha corporate IT vazhkai venamda yenaku.vara company yelam kalachu anupidaren..free

    ReplyDelete
  2. Hahahah ROFL awesome man!!!

    ReplyDelete
  3. ha ha ha idha vida adhigama oru loosu'oda manatha vanga mudiyadhu :D ha ha

    ReplyDelete
  4. ROFL :) mudila da saami.. kannulerundhu thanni varum alavu sirichaachu:)

    2 questions
    1) Did this really happen?
    2) Manager ku Tamil theiryaadhaa?

    ReplyDelete
  5. @Folks - Thanks for your comments.

    @Lavanya - rendutthukkum answer yes :)

    ReplyDelete
  6. Yen eppadi???
    Paavam avaru!!
    :-)

    ReplyDelete
  7. 'கு காத்த கோமான்' பட்ட பெயர் மிக அருமை ...

    me and my pal were reading and laughing and reading and laughing and reading and laughing...

    cheers

    ReplyDelete
  8. Henceforth, i should be careful with my sub-ordinates i think. Anyway enjoyed it.

    ReplyDelete
  9. That's extremely hilarious :) Indha vadamozhi pasanga komaalithanathukku alave illa..

    I had one such incident about 9 yrs ago. Nearly died of laughter

    ReplyDelete
  10. That's extremely hilarious :) Indha vadamozhi pasanga komaalithanathukku alave illa..

    I had one such incident about 9 yrs ago. Nearly died of laughter

    ReplyDelete
  11. Wish Mr. Loosu could read this ;) Great humor! =D

    ReplyDelete
  12. funny! Can't believe it really happened! _ Komaanaala sema time pass pola iruku.. Enjoy!! And share with us too ;)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கல்யாணமோ கல்யாணம் ...

"இந்த கட்டுரையில் வரும் சம்பவங்களும், வசனங்களும் வாசகர்களின் நிஜ வாழ்கையோடு ஒத்து இருந்தால், அது தற்செயலே. அதற்க்கு நானோ அல்லது என் வலை தளமோ பொறுப்பல்ல ... " என்ன டா பில்டப் பலமா இருக்கே நு பார்கறீங்களா ? இந்த கட்டுரைய படிங்க, அப்புறம் புரியும் ... நீங்களே சொல்லுவீங்க ... "Same Blood" நு ... நம்ப சமுதாயத்துல கல்யாணம்ங்கற விஷயம் மட்டும் ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிடான்களோ நு யோசிக்கறேன், அதுவும் குறிப்பா எங்கள மாதிரி "Brahmin - IYER" கம்யூனிடி ல அது ரொம்பவே வாஸ்தவமான ஒரு விஷயம். இந்த கட்டுரைய படிக்கற நீங்க இது என் வாழ்க்கைய பத்தின விஷயம் தான் நு நினைசீங்கன்னா அது தப்பு, இது பொதுவா எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கற விஷயம் தான், அதையே கொஞ்சம் காமெடியா சொல்லணும் ஆசை படறேன், அவ்வளவுதான். வாங்க கல்யாணம் ஆகாத ஒரு பையனோட (ஐயர் பையனோட) வீடு எப்படி இருக்கும் நு காட்டறேன் ... தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் மும்முரமா ஏதோ ஒரு ஜாதகத்த பார்த்துகிட்டு இருக்காங்க ... ஏண்டி ... இந்த பொண்ணோட ஜாதகம் 2002 ல ஏ நமக்கு வந்துது ல ? இன்னுமா இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகல ? ஆமாம்

My Songs Collection ...

After a long struggle, i somehow managed to collect 800+ songs of SPB, which to me are the GOLDEN SONGS sung by that GOLDEN VOICE. Here is my complete songs collection. My target is to get 1000 songs of SPB (Tamil Songs). S.NO Name Artist Album 1 Unna Vellaavi Vechu Thaan GV Prakash Aadukalam 2 Ayyayo Nenju Alayudhadi SPB - S P Charan Aadukalam 3 Ottha Sollaala Velmurugan Aadukalam 4 Yetthi Vecha Nerupinile SPB - Chitra Aalapirandhavan 5 Ponnai Virumbum Boomiyile TMS Aalaya Mani 6 Oru Kili Urugudhu Janaki Aanandha Kummi 7 Oomai Nenjin Osaigal SPB - S Janaki Aanandha Kummi 8 Oru Raagam Paadalodu KJY - Chitra Aanandha Raagam 9 Mere Sappunoun Ki Rafiq Aaraadhana 10 Oru Kunguma Chengamalam SPB - S Janaki Aaraadhanai 11 En Kannukoru Nilavaa SPB - JANAKI Aaraaro Aariraro 12 Kanmaniyae Kaadhal Enbadhu SPB - S JANAKI Aaril Irrundhu Arubathu Varai 13 Meenammaa Adhi Kaalaiyilum Unni Krishnan - Shobana Aasai 14

Madras Tamil in IT Industry

Ah, thot of writing a new series called PITHUKULI, and i hope you all will enjoy this series. Here is my first try and please let me know your sincere comments. We all know that IT industry is a place for all educated people and english is considered to be the global language in this industry. Me hailing from the heart of chennai, i would love to see "Chennai Thamizh" being spoken at all s.w companies, so here is a small conversation between a Programmer and his Project Manager, in pure "Chennai Sen Thamizh". The situation is this ... Its appraisal time and Project manager is doing appraisal for his team member. ahhhh ... vaa kannu ... suresuu ... eppdi keera ? sokaa keerayaa ?? inaathuku unna itukunu vandhurukaango nu unikku message teriyumla ?? aahaann ... inaamo ... aapuraisalaa ... keepuraisalo ... ennamo oru ezhavu ... atha pathi kostin panna thaanae ittnadhukara ... kareeektaa putcha baa maatera nee ... seri ... nee immaa naalu inga kundhikinu inaatha kilicha