தாய் மண்ணே வணக்கம் ...



மோகத்தின் உச்சியில் மயங்கித்தான் கிடந்தோம்
தாய் மண்ணின் மணத்தை நுகர்வதற்கு மறுத்தோம்
தேசமெங்கும் ஊழல் என்று மார்தட்டித்திரிந்தோம்
நம்வீட்டின் ஓட்டைகளை சரி செய்ய மறந்தோம்
போதுமடா சாமி என்று அயல்நாடு பறந்தோம் ...


பணம் ஈட்டும் ஆசையில் உறவுகளை துறந்தோம்
நம் நாட்டில் இல்லை என்று கடல் பல கடந்தோம்
கல்வி கற்கும் ஆவலில் ஈட்ட செல்வதை கரைத்தோம்
அயல் நாட்டு பட்டத்தை வெற்றி என்று நினைத்தோம்
அதுவும் வெறும் காகிதம் என்றறிந்து ஒரு நொடி திகைத்தோம்

பிறப்பையும், இறப்பையும் ஈமைலில் படித்தோம்
பெண் பார்க்கும் படலத்தையும் அங்கேயே முடித்தோம்
இட்டிலியும் தோசையும் அறியாதது போல் அலைந்தோம்
பிஸ்ஸாவும் பர்கரும் தெரிந்தது போல் நடித்தோம்
கோக்கையும், பீரையும் குலுக்கி குலுக்கி குடித்தோம்
நம் நிலைமையை நாமே எண்ணி மனதுக்குள் சிரித்தோம்

அயல் நாட்டின் பெருமைகளை பேசி பேசி மகிழ்ந்தோம்
நம் நாட்டில் அவை தோன்ற யுகமாகும் என்றிகழ்ந்தோம்
"fuck"கையும், "புல் ஷிட்டையும்" பேச்சினிடையே கலந்தோம்
அவையன்றி பேசவே முடியாதென்று விணைந்தோம்
மதிகெட்ட மானிடனாய் உருமாரிக்கிடந்தோம்

அன்று அந்நியனின் கைப்பிடியில் சிக்கித்தான் தவித்தோம்
அடித்தாலும் உதைத்தாலும் மண்டி போட்டு பிழைத்தோம்
வலி தாங்க முடியாமல் அம்மாவை அழைத்தோம்
உன் மடி தான் சொர்கமேன்ற உண்மையொன்றை உரைத்தோம்
காலம் கடந்த சிந்தையென்று இன்று நாமே உணர்ந்தோம்

போதுமடா அடிமைகளாய் நாம் வாழ்ந்த காலம்
மீதமுள்ள சொத்தென்றால் அது இந்தியனின் மானம்
உனக்காக காத்திருக்கு இந்திய விமானம்
அதை ஏறி வருவது தான் உன் உயிருக்கு பாலம்
கட்டாயம் ஒரு நாள் இந்தியாவும் மாறும்
அதை கண்டு உங்கள் மனம் கட்டாயம் ஆறும்


இந்தியாவை போல ஒரு தேசம் எங்கிருக்கு சொல்லடா
குறை மட்டும் கண்டெடுக்க நீயும் நானும் இல்லடா
அங்கு சிந்தும் ரத்தத்துளியை இங்கு கொஞ்சம் சிந்தடா
இந்தியனாய் பிறந்தோமென்று தலை நிமிர்ந்து நில்லடா ...

தாய் மண்ணே வணக்கம் ....

Comments

  1. Awesome post...i cud completely visualize this heheh

    ReplyDelete
  2. Wonderful, Didnt know that u could write 'kavithai " too.
    Experience pesugiratho?

    ReplyDelete
  3. @chan - thanks dude ...

    @chennai girl - Ah, Naanum vellakaaran kaala alambi vittutu thaan indhiya ku vandhen, but I made sure that my country's dignity is maintained. Ippo naanum oru suttha indhiyan :)

    ReplyDelete
  4. I totally agree with you about everything. But what about Indians living in India. They are hating each other, loving other country's foods like Pizza, burger, loving other country's people like talking nice to foreigners, loving other country's culture like dating. Did any of us have answered anything softly to any illiterate fellows. We as Indians will respond in a different way to different kind of people. If a person is rich, we deal with them nicely, but what about poor people. Do we all treat them euqally. First we need to answer this. Then we can think about Indians in other countries.

    Sorry if my post is little harsh. This is due to love towards to my country. MY INDIA.

    ReplyDelete
  5. சொர்க்கம் சென்றாலும் சொந்த நாடுபோல் சுகம் வருமா?

    Its a "f***ing" good poem dude!

    ReplyDelete
  6. ellarum ayal nadu parathuda,
    yaar veedu odaiye sari seiva?

    ReplyDelete
  7. Anonymous8:50 PM

    ur kavithai is super.......i think r u fan of T.R.? just joke it ya. i read ur about me.... i also hate the palli bt my mother told y did u hate God love it& create it then nee yaru atha hate pana nu sonnanga,now a days i see it & say my heart palli can also hate to see me & one day god hate me anything about my thoughts bt god never hate it palli in any time.so therafer its also one of most super creation of god.i never disturb it.it also never disturb me...romba mokka ya pesieruntha sorry frnd soulanumnu thoonuchu atan sonnan(when i read ur member of blue cross):)

    ReplyDelete
  8. @pavitra - Ah, ungalukkum palli naa bayamaa ... :) no need of sorry dude, adhaan mokkai nu neengale othukiteengale ;-)) mannichu vittutom ... ;)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Madras Tamil in IT Industry