என் கவிதைகள்
என்னுள் இருக்கும் கவிஞனின் கன்னி முயற்சி இது, கவிதைகளின் அரசன் என்று நான் மதிக்கும் என் ஆசான் "நிலா ரசிகன்" அவர்களின் ஆசியுடன் ... 1. இந்த ஊரில் மட்டும் இயற்கையின் சீற்றம் அதிகமாகிக்கொண்டே போகிறதே ஹும், ஏன் சீறாது ? தன்னை விட என்னவள் அழகாகிக்கொண்டே போகிறாளே என்கிற கோபமோ என்னவோ ... 2. நல்ல வேளை நாம் மிக உயரத்தில் இருக்கிறோம், அருகில் இருந்திருந்தால் அவள் கண்களை விட அழகாக இருந்திருக்க மாடோம், கிசுகிசுத்து கொண்டன விண் மீன்கள், என்னவளின் கண்களை பார்த்து. 3. அம்மாவின் வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு வேலை நிமித்தமாக ஊருக்கு வருகையில், முட்டி கொண்டு வந்தது கண்ணீர், அப்போது நினைவில் வந்தது, சீதனமாய் கொடுத்தனுப்பிய கன்றுக்குட்டியின் தாய் பசு முகம். 4. என்ன உணவு இது ? மனிதன் உண்பானா இதை ? போய் ஏதேனும் நாய்க்கு கொட்டு, என்று சீருகையில் கேட்டது, உணவிலாமல் அழும் வேலைக்காரி குழந்தையின் பசி அழுகை. 5. வெகு நேரம் வராத காதலிக்காக கால் கடுக்க பூங்காவில் காத்திருக்கும் போது வராத கோபம், அம்மா உடல் நலம் இல்லாததால், மண்ணெண்னைக்காக ரேஷன் கியூவில் காத்திருக்கும் போது வந்தது, அம்மாவின் மீது ... 6. மட