Posts

Showing posts from May, 2013

காலத்தை வென்ற கலைஞன் - டி.எம்.எஸ்

Image
தமிழகம் மறந்த இந்த சௌராஷ்டிரா மண்ணின் மைந்தனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.  எழுபதுழலில் பிறந்ததற்கு இன்றும் பெருமை படும் மனிதர்களில் நானும் ஒருவன். எங்களின் பால்ய காலம் தான் எத்தனை மகிழ்ச்சியானது, தெருக்களில் கண்ணாமூச்சி விளையாடுவது, கோலி, பம்பரம், கில்லி, பாண்டி, பல்லாங்குழி, பரமபதம், எத்தனை எத்தனை அற்புத ஆட்டங்கள், இவற்றில் ஒன்று கூட இந்த காலத்து குழந்தைகள் கேட்டிருக்கக்கூட மாட்டார்கள், இவை போலவே எங்கள் இள வயதில் எங்களை தங்கள் திறமையாலும், ஆற்றலாலும், வியக்கவைத்தவர்கள்  பலர் -  கிரிக்கெட்டில் சுவிங்கம் சுவைத்து, எதிரணியை துவைத்த ரிச்சர்ட்ஸ், அரசியலில் - பெண் சிங்கமாய் வாழந்த இந்திரா காந்தி, நடிகர்களில் - காலம் அழிக்க முடியாத எம்.ஜி.ஆர் - சிவாஜி, அதே வரிசையில் இசைக்கு இலக்கணம் கொடுத்த எங்கள் - எம்.எஸ்.வீ மற்றும் டி.எம்.எஸ் வானொலி மட்டுமே நமக்கும் வெளி உலகத்திற்கும் இருந்த ஒரே பாலம், அதில் தான் எத்தனை இன்பம், வண்ணச்சுடர், ஒளியும் ஒலியும், செய்திகள், இவற்றை கேட்கவே கிறங்கி கிடந்த நாட்கள் தான் எத்தனை எத்தனை, இன்று கை பேசியில் என்னதான் நீங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந