மெகா சீரியல்
வாய் நிறைய சிரிப்போடும், முகம் நிறைய பொட்டோடும், சீவி பின்னிய சடையோடும் அலுவலகம் முடிந்து அலுப்பாக வரும் கணவனை மனைவி மார்கள் வரவேற்ற காலமெல்லாம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் தான் இனி பார்க்க முடியும். இபொழுது இருக்கும் நிலைமையே வேறு, அழுத கண்களோடும், சிந்தி சிந்தி சிவந்த மூக்கோடும், வீங்கிய முகத்தோடும் தான் இக்கால மனைவிமார்கள் கணவனை வரவேர்க்கின்றனர்... ஒரு முறை இப்படித்தான் ஒரு மாலை வேளையில், நானும் அலுவலகம் முடித்து களைப்புடன் வீடு திரும்பியபோது, விக்கி விக்கி அழுதுகொண்டே என் தோள்களில் சாய்ந்த என் மனைவியை பார்த்து பதறிப்போனேன், "என்னடா செல்லம் ஆச்சு உனக்கு, மாமன் நா இருக்கேன், என் கிட்ட சொல்லுடா உன் கஷ்டத்த" என்று ஆறுதல் கூரும்வண்ணம் வினவினேன், "கமலா சித்தி ஆக்சிடென்ட் ல செத்து போய்டாங்க" என்று கூறி, மேலும் எதுவும் பேச இயலாதவளாக அந்த ஒழுகும் பிசிபிசுப்பு மூக்கு சளியை என் புது சட்டையில் தேயத்தவளாய், அதன் மீதே முகம் புதைத்து அழுகையை தொடர்ந்தாள். அவள் குடும்பத்து நபர்களை நான் மனதில் கொள்வதில்லை என்ற எண்ணம் அவளுக்கு எப்பொழுதும் உண்டு, அதை போலவே எனக்கு அவள் குடும்பத்