அவள் ஒரு ...

நந்தினியின் மனதில் ஓடிக்கொண்டிருந்த குழப்பங்கள் அவள் இறங்கும் எடத்தை மறக்க செயும்மளவுக்கு அவளை ஆக்கிமித்துக்கொண்டிருந்தது. "ஏ பொண்ணு, அட உன்னதாம்மா, உசிலம்பட்டி எறங்கணும் நு சொன்ன டிக்கெட் நீ தானே, சீக்கிரம் எறங்கும்மா, உன்ன எழுப்பறதுக்கு அலாரமா வெக்க முடியும், என் வண்டி நு ஏறுதுங்க பாரு, சாவுக்ராக்கிங்க" - என்று கண்டெக்ட்டர் சீரியவுடன், தன் முதுகு பையை மாட்டிக்கொண்டு வெளியே இறங்கினாள் நந்தினி. காலை நேர குளிர் காற்று அவள் மனதிற்கும், உடலிற்கும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது, தான் பிறந்து வளர்ந்த இடம் தான் உசிலம்பட்டி என்றாலும், அன்று அவளுக்கு அந்த இடம் மிகவும் புதிதாக தெரிந்தது. தன் வீடு நோக்கி நடக்க முற்பட்டவள், ஏதோ தடுத்தது போல், தன் போக்கை ஓடிக்கொண்டிருக்கும் "செண்பகா" நீரோடையை நோக்கி நடந்தாள் ...

நந்தினி - சுண்டிவிட்டால் சிவக்கும் நிறம் இல்லை என்றாலும், எவரும் அவளை கடந்து போகும் பொழுது ஒரு கணம் திரும்பி பார்க்கவைக்கும் ஈர்ப்பு உடையது. அளவான உயரம், அதற்க்கு ஏற்ற இடை, மொத்தத்தில் அவளும் ஒரு சராசரி பெண் தான். "பொன்னம்பலம்", ஊரில் அனைவராலும் "அறியப்பட்ட" ஒரு நபர், இந்த நாட்டின் சிறந்த "குடி மகன்களில்" அவரும் ஒருவர். உள்ளே அந்த "திரவிய அரக்கன்" நுழைந்த பின், அவர் கட்டுப்படும் ஒரே ஜீவன் "நந்தினி", அவரின் முதல் தாரத்து பெண். அவர் இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்ட "தேவகி", நந்தினிக்கு "இரண்டாம் தாய்" என்று தான் சொல்ல வேண்டும், வழக்கமாக "சித்தி" என்ற "அரக்க" பரிமாணத்திற்கு முற்றிலும் மாறு பட்டவள். அவளின் தந்தை பொன்னம்பலத்திடம் வாங்கிய கடனுக்காக அந்த குடிகாரனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்ட பாக்கியசாலி.

சூரியன் தனது ருத்ரதாண்டவத்தை முடித்துக்கொண்டு "நாளைக்கு வெசுக்கறேண்டா உங்கள" என்ற தொனியில் மலை அடிவாரம் நோக்கி விரைவாக மறைந்து கொண்டிருந்தது. நந்தினி தான் படித்த பள்ளி நோக்கி நடக்க துவங்கினாள். எண்ணற்ற நினைவு சிதறல்கள் அவள் மனத்திரையில் பட்டு தெறித்தது, அதில் தெறித்த அதனை துளிகளும் ஒன்று கூடி வரைந்த முகம் "கண்ணன்", நந்தினியின் ஆருயிர் தோழன், பின்னாளில் காதலன். நந்தினி இந்த உலகில் அதிகம் நேசிக்கும் ஒரு ஜீவன். அவளின் கோபங்களுக்கும், சந்தோஷங்களுக்கும் பலியாகும் ஒரு அப்பிராணி அவன். சிறு வயதிலேயே தன் தந்தையையும், தாயையும் தன் கண் முன்னே பரி கொடுத்த பாதகன், ஊரார் அவனுக்கு வைத்த செல்ல பெயர் "முழுங்கி", அவன் பெற்றோரை முழுங்கியவனாம்.

நந்தினி அந்த மூடிய பள்ளியின் அரை கதவை மெல்ல திறந்தாள், தானும் கண்ணனும் சிரித்து கும்மாளம் போட்ட அந்த கடைசி மர பெஞ்சை வாஞ்சையுடன் வருடினாள், அவளின் ஸ்பரிசம் தொட்டு வெளிப்பட்டது அந்த செதுக்கல் - "நந்தினி லவ்ஸ் கண்ணன்", அவளின் கன்னங்கள் தாண்டி கரைபுரண்டு ஓடியது அந்த கண்ணீர் அருவி. அந்த அறையின் நிசப்ப்தமும், அதில் கலந்துள்ள அவளின் நினைவுகளும் அந்த தருணத்தை மேலும் அழகு படுத்தியது போல் தெரிந்தது அவளுக்கு. அன்று நல்ல பௌர்ணமி, அவள் அவ்வளவு அழகாக ஒரு இரவை பார்த்ததில்லை அவள் வாழ்நாளில். மெல்ல அந்த பரந்த வயல் பரப்பில் நடந்தாள், அந்த இருளிலும் நந்தினிக்கு அழகாய் தெரிந்தது அங்கு சுருண்டு உறங்கிக்கொடிருந்த அரவத்தின் கண்கள். தான் ஆசையாய் வளர்த்த செல்ல நாய் "மணியின்" ஊளை அவள் காதில் மெலிதாக விழுந்தது.

நந்தினியின் பக்கத்து வீடு தான் கன்னியம்மாளின் வீடு. நந்தினியை தன் மகள் போல் பார்த்து வளர்த்த அவள் பள்ளிகூடத்தின் "ஆயா". அந்த இரவு வேளையில் நந்தினியை கன்னியம்மாள் தன் கனவிலும் எதிர் பார்கவில்லை. "என் ராஜாதி, என் கண்ணு, என் தங்கம், எங்கடா இந்த சிறுக்கி வீட்டுக்கு இந்த நேரத்துக்கு வந்தவ ? யாருமே இல்லாத இந்த அனாத கெழவிய பார்க்கணும் நு உனக்காச்சும் தோணிச்சே, எப்படிமா இருக்க ?" என்று பாசம் போங்க பேசிய கன்னியம்மாளின் கண்களும் கசிந்தது. "ஆயா, எனக்கு ரொம்ப பசிக்குது ஆயா, நீ எப்பவுமே ஆசையா எனக்கு குடுப்பியே "கடலை மிட்டாய்" அது இருக்கா ? எனக்கு தாயேன்" என்று கெஞ்சலாக நந்தினி கேட்க, ஓடிச்சென்று அந்த தகர டப்பாவிலிருந்து அள்ளி எடுத்து கொடுத்தாள் அவள். "ஆயா, உன்ன என்னிக்குமே இந்த நந்தினி மறக்க மாட்டா, என்னிக்குமே எனக்கு ஆயா நீ தான், சரி நா போறேன், நீ தூங்கு" என்று சொல்லி விடை பெற்றாள் நந்தினி. நந்தினியின் வீடு, கன்னியம்மாளின் வீடிற்கு பக்கத்துக்கு வீடு.

அந்த காலை பொழுது உசிலம்பட்டியில் வழக்கம் போல் துவங்கியது, மாலை நேர ஓய்வுக்கு பின், புது தெம்போடு உச்சி நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது சூரியன். சுமார் 9 மணி அளவில், பொன்னம்பலமும், தேவகியும் போட்ட கூச்சலில், வேப்ப மரத்தில் எச்சம் போடா எண்ணிய காகமும் அவசர அவசரமாக பறந்து போனது, கூச்சல் கேட்ட அடுத்த வினாடியில் ஊர் கூடி போனது அவர்களின் வீட்டு வாசலில், பதறி அடித்து கொண்டு ஓடி வந்த கன்னியம்மாள் "யாருடி இவ, கோண சிறுக்கி, பொண்ணு ஊருலேர்ந்து வந்துருக்கா, அவளுக்கு வாய்க்கு ருசியா ஆக்கி போடாம கூச்சல் போட்டு ஒப்பாரி வெக்குரவ, நந்தினி நீ வாடா ராஜாதி, இந்த ஆய இருக்கேன் உனக்கு" என்று மறு கூச்சல் போட்ட கண்னியாம்மாளை விக்கித்து பார்த்து நின்றனர் நந்தினியின் பெற்றோர்கள், அவர்கள் கையில் நந்தினியின் இறப்பு செய்தி தாங்கி வந்த தந்தியுடன் ...

Comments

  1. tats an awesome story mate...very free flowing...ur control over tamil shows...gud job!!

    ReplyDelete
  2. நல்ல முயற்சி சதீஷ். எழுத்துப்பிழைகளை களைந்தால் வாசிக்க வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  3. wow!!! super story...ur writing is like that of my aathukarars with lots of spelling mistakes (pblm with translator or tamil itself)

    ReplyDelete
  4. a good narrative style. will be a lot easier to read if you work on the spellings :). Sent you details separately as requested :)
    looking fwd to more of the same :)

    ReplyDelete
  5. Ha haaaaaaa :-)
    Ellam "A haunting" partha velaivu!!!
    Well written,the suspense was held!!

    ReplyDelete
  6. நானு நந்தினி ஒரு பேயாக்கும்நு நினச்சிண்டு ஒன்கதையை படிச்சுபுட்டேன் புள்ளே , அப்பறமா பார்தக்கே அது ஒரு நிஜ பிசாசு ! நல்லாவே சொல்லிருக்க புள்ள ,எழுத்து சும்மா பதினெட்டு வயசு கணக்கா நட கட்டுது . பொழச்சிப்பே புள்ள !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Madras Tamil in IT Industry