லைலா ...

இந்த கவிதைகளுக்கு விதை ... தற்போது வீசி அடங்கிய லைலா எனும் புயல் ...

1. விடை பெற மறுக்கும் அலுவலக அலுவல்கள்
சற்றே களைப்படைந்த கண்களின் ஈரம்
நாற்காலின் சக்கரங்கள் பின்தள்ளி எழுகையில்
கண்ணாடியில் தெரித்துள்ள மழை துளிகள் ஈர்த்தது
சிறு குழந்தையின் பூரிப்போடு துள்ளியது மனது
ஓடிச்சென்று மழையின் சாரலை ஏந்தியது முகம்
வாழ்க்கையில் தொலைத்த சந்தோஷங்களில் ஒன்றை
நினைக்கையில் மழையோடு கரைந்தது கண்ணீர்
யாரோ ஒருவரின் அழைப்பில், மனதை மட்டும் மழையில் நனையவிட்டு
உடல் மட்டும் திரும்பிச்சென்று நாற்காலியில் அமர்ந்தது ...
****************************************************************************
2. பிஞ்சு உடல் முழுவதும் அனலின் தாக்கம் ...
மகளை ஓங்கி அடித்த வலியில் எனக்கும் ஏக்கம் ...
வெளியில் நிற்காமல் கொட்டியது நான் நனைய விரும்பும் மழை ...
கொட்டும் மழையில் காகித படகு விட்டதா ஒரு பிழை ?
மனதிற்குள் வெதும்பி புழுங்கி அழுகையில், மெலிதாக கேட்டது குரல் ...
"இனிமே நா மழை ல நனையமாட்டேன், என்ன அடிக்காத ..."
அடைத்து வைத்த கண்ணீர் குடம் வெடித்து அடங்குகையில் ...
என் மேல் பொழிந்து வழிந்தது .... என் ஆசை மகளின் முத்த மழை
****************************************************************************
3. ஒவேனப்பெய்யும் மழையின் சப்த்தத்தில் சிணுங்கியது வீடு
என்றோ வாங்கிய உருளைக்கிழங்கை தேடியது மனம்
சுடச்சுட தயாரானது நொடிநேரத்தில் உருளைக்கிழங்கு பஜ்ஜி
கேட்காமலே கோப்பையில் நிரம்பியது டிகிரி காபி
இவை இரண்டையும் சுவைத்துக்கொண்டு வெளியே பார்கையில்
உடல் நடுங்கி, மேனி சுருங்கி, தலையில் பிளாஸ்டிக் தொப்பியுடன்
கண்கள் சிமிட்டி கை அசைத்தாள் நடைபாதையில் உறங்கும் சிறுமி
நெஞ்சில் நஞ்சாக இறங்கியது காபி, பாறாங்கல்லாய் தெரிந்தது பஜ்ஜி

Comments

  1. WoW! Third one is excellent

    ReplyDelete
  2. Good ones, Sat :)
    I like them very much

    ReplyDelete
  3. Wonderful kavithai. I liked the second one very much.
    Kadaisila bajji mattum vidala neenga!!!! ;)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Kadalai Podaradhu Eppadi ??