ஐயோ சுறா ...

என் உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை, தற்பொழுது வெளி வந்துள்ள சுறா எனும் திரைப்படத்தை தவறியும் கூட (சுவரொட்டிகளிலும் கூட) பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் நெஞ்சங்களின் சார்பாக நான் அந்த கொடிய விஷத்தை நேற்று இரவு பருகினேன், அந்த கொடிய விஷம் பற்றிய சில குறிப்புகளை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

பின் குறிப்பு - 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இந்த பதிவை படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...

டேய் விஜய், நீ என்ன லூசா? உனக்கெல்லாம் கதை கேட்டு படம் செலக்ட் பண்ண தெரியாதா? டேய் நார மண்டையா, நீ போடற பிட்டு ரெம்ப ஓவரு, உன் மூஞ்சிக்கெல்லாம் இவளோ பிட்டு ஆகாது. டேய் சுனாமி என்ன வேகத்துல வரும், சுனாமி யோட பவர் என்ன, இதெல்லாம் உனக்கு தெரியாதாடா? நீ நடந்து வரும்போது காத்துல காஞ்ச இலை பறக்கறது, மண்ணு தெரிச்சு போறது, சூறாவளி அடிக்கறது இதெல்லாம் கூட பொறுத்துகிட்டேன் டா, ஆனா மகனே, நீ நடந்து வரும் போது உன் பின்னாடி சுனாமி வரா மாதிரி காட்டின பாரு, கையாலே அத மட்டும் என்னால சகிச்சுக்க முடியல டா, சேரி கழுத அத கூட நா மன்னிச்சு விட்டுடுவேன், ஆனா நீ ஒரு மொற மொறைச்சா, சுனாமி பின்னாடி கடலுக்குள்ள போறா மாதிரி காட்டினியே, அங்கேயே தூக்கு மாட்டிகிட்டு சாவலாம் போல இருந்துச்சு, ஆனா நா சாகல, ஏன் சொல்லு? உன்ன மாதிரி பண்ணி எல்லாம் வாழும் போது, நா ஏன் சாகனும்? அதான் சாகல.


டேய் நாயிங்களா, ஒரு பொண்ண மடக்கறது எவளோ கஷ்டம் நு தெரியுமாடா உங்களுக்கு? அதுவும் தமன்னா மாதிரி பிகர கரெக்ட் பண்ணனும் நா எவளோ செலவாகும் தெரியுமா? கொக்கா மக்கா, சும்மா ஒரு கருத்து சொன்னதுக்கே தமன்னா மாதிரி பொண்ணு பிக்-அப் ஆகும் நா, நாட்டுல நாங்கலாம் எவளோ தமன்னா வ பிக்-அப் பண்ணிருக்கணும் தெரியுமா? டேய், உன்ன தமன்னா லவ் பண்ணினது கூட எனக்கு வருத்தம் இல்ல டா, அது ஏதோ காசுக்கு ஆசை பட்டு அந்த தப்ப பண்ணிடுச்சு, ஆனா அவ உன்ன பார்த்து பேசற டயலாக் தான் டா என்னால தாங்கிக்க முடியல, டேய் உனக்கு மனசாட்சியே கிடையாதா? அது சரி, உன் மூஞ்சிய லவ் பண்ணனும் நா அந்த பொண்ணு லூசா தான் இருக்கனும், தமன்னா எப்போ மேக்-அப் போட்டுக்கிட்டு அடிக்கடி தற்கொலை பண்ணிக்க வருதோ அப்பவே ஜனங்க முடிவு பண்ணிடாங்க அது லூசு நு. இனிமே மவனே நீ ஒரு படம் நடி, அப்புரம் இருக்கு உனக்கு சங்கு.

இந்த படத்தை பற்றி பல விமர்சனங்களும், எச்சரிக்கைகளும் வந்த வண்ணம் இருந்தது, இவை எவற்றையும் மனதில் வாங்கிக்கொள்ளாமல் நானும் அந்த திரைப்படத்தை பார்க்க அமர்ந்தேன். இந்த படத்தை நான் திருட்டு டிவீ டி இல் பார்த்தேன் என்று பெருமை போங்க சொல்கிறேன், ஒரு திறை அரங்கிற்கு சென்று பார்க்குமளவிற்கு இந்த படம் தகுதி அடையவில்லை என்று தான் கூறுவேன். படத்தின் துவக்கத்திலிருந்தே அதன் திரைக்கதை "மந்திரித்து விட்ட கோழி" போல், எங்கெங்கோ செல்கிறது, சம்பந்தமே இல்லாமல் விஜய் பேசும் பயனில்லாத கருத்துக்கள் சலிப்பை ஏற்படுத்துகிறது. கந்து வட்டிக்காரனிடம் அடகு வைத்த ரேஷன் கார்டை மீட்க போகும் விஜய், அது பற்றி ஒன்றும் பேசாமல் தேவை இல்லாத நாட்டு விஷயங்களை பேசியது ஏன் என்று இப்பொழுதும் புரியவில்லை. என்ன தான் விஜய் தன்னை மாஸ் ஹீரோ என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், அவர் பேசும் பல வசனங்கள் அவரின் வயதிற்கும், தகுதிக்கும் பொருந்தவில்லை.

வடிவேலு என்கிற ஒரு மாபெரும் நகைச்சுவை கலைஞன் இந்த திரைப்படத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார், அவரின் நகைச்சுவை தாமரை இலை மேல் நீர் போல ஒட்டாமல் இருந்தது படம் முழுவதும், தவிர, நகைச்சுவை என்கிற பெயரில், மிகவும் சிரமப்பட்டு பல புத்தகங்களைப் படித்து, அதில் வந்த துணுக்குகளை ஆங்காங்கே ஒட்ட வைத்து தயாரிக்கப்பட்ட நகைச்சுவை சற்றே குமட்ட செய்கிறது. ஆகவே வடிவேல் இருந்தும் இந்த திரைப்படம் பார்க்க சகிக்கவில்லை. "தமன்னா", பாவம் அவர்களுக்கு என்ன பணப்பற்றாக்குறையோ, முற்றிலும் இந்த படத்தில் தேவை இல்லாத ஒரு நபர் என்றால் அது அவர் தான். பார்பதற்கு மெழுகு சிலை போல் உள்ளாரே தவிர, நடிப்பு மட்டும் துளியும் வரவில்லை. அவர் விஜய் மீது காதல் வயப்பட்டது எப்படி என்று இயக்குனருக்கும் புரியாத ஒரு புதிர் தான். வில்லன் விஜய்யின் மண்டையில் ஓங்கி அடித்து ஒரு கூரை வீட்டிற்குள் அவரை அடைத்து தீ வைக்கிறார், ஒட்டுமொத்த குடிசைப்பகுதியும் தீயில் கருகிய நிலையில், "சுறா" மட்டும், எங்கோ அமைந்துள்ள அம்மன் சிலைக்குப் பின்னால் மீண்டும் தோன்றுவது அப்பட்டமான திரைக்கதை சரிவு.

பிச்சைக்காரனாக நேற்றுவரை இருந்த சுறா, திடீரென்று மும்பை சென்று, பல கணிப்பொறிகளை விற்கிறார், இதில் பெரிய கொடுமை என்ன தெரியுமா வாசகர்களே? விஜய் மும்பையில் உள்ள ஒரு சேட்டிடம், லேப்டாப்களை விற்கும் பொழுது, வந்துள்ளது உண்மையான சுறா தான் என்று கண்டுபிடிக்க, அந்த சேட்டு லேப்டாப்பில் ஒரு பொத்தானை அழுத்துகிறார், அது வெப்-காமின்  மூலம் விஜய்யின் கண்களை ஸ்கேன் செய்கிறது, பின்னர் அந்த ஆடிடோரியத்தில் வைக்கப்பட்டுள அனைத்து லேப்டாப்புகளிலும் விஜய்யின் கொடூரமான சுறா முகம் பளிச்சிடுகிறது, சத்தியமாக சொல்லப் போனால், மைக்ரோசாப்ட் கூட இப்படி ஒரு விஞ்ஞான பூர்வமான ஒரு மென் பொருளை தயாரிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். எப்படி "ரமணா" திரைப்படத்தில் விஜயகாந்த் "MS-WORD" மென்பொருளில் சரமாரியாக கணக்குகளை போட்டுக்கொண்டிருந்தாரோ, அதையும் மிஞ்சி விட்டது இந்த கூத்து. சம்பந்தமே இல்லாமல், திடீரென்று AUDI காரில் விஜய்யும், தமன்னாவும் அந்த குப்பத்திற்கு வருவது யாருக்காவது புரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள். கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவ நினைக்கும் ஒரு மனிதன், கணிப்பொறி விற்று வந்த காசில், அவர்களுக்கு உதவி செய்யாமல், ஏன் பல லக்ஷங்கள் கொடுத்து AUDI கார் வாங்க வேண்டும்? ஏன் டா பண்ணி ... ஒரு மாருதி 800 போறாது உனக்கு?

விஜய் மீனவர்களுக்காக கட்டிக்கொடுத்த காலனியை வில்லன் அழிக்க முற்ப்பட்டு, ராக்கெட் போல உருவம் உள்ள, கணிப்பொறி மூலம் வெடிக்கச்செய்யும்  ஒரு பெரிய குண்டை, சாக்கடை உள்ளே வைத்து விடுகிறான், அதை விஜய் தடுக்க முடியா வண்ணம், அவரை பெரிய கயிறு கொண்டு கட்டிப்போட்டு விடுகிறான், அதுவும் போதாது என்று விஜய்யின் முட்டிக்கு முட்டி தட்டி பிண்ணி பெடலும் எடுக்கிறான், சாதரணமாக, சற்றே இடித்துக்கொண்டாலும் கூட வலி உயிர் போய்விடும் அளவிற்கு வலிக்கும் முட்டியில், ஒரு நல்ல உருட்டுக் கட்டை கொண்டு மாங்கு மாங்கு என்று அடிக்கும் வேளையில், விஜய் ஆக்ரோஷமாக சிரிக்கிறார், ஆனால் அப்பொழுதோ, படம் பார்க்க வந்த அனைவரின் கண்களிலோ கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது - "டேய், இவளோ நேரம் படம் பார்த்தும் என்ன கதை நு சத்தியமா புரியலையே டா, எப்போ டா கதைக்கு வருவீங்க" என்பது போல. உலகில் எவரும் இது போல சப்பையான கிளைமாக்ஸ் காட்சி எடுத்திருப்பார்களா என்ற மிரட்சி நம்முள் தோன்றி மறைகிறது, வில்லனின் மனைவியும், குழந்தைகளும் அந்த காலனியின் திறப்பு விழாவிற்கு "சிறப்பு விருந்தினர்கள்", இதை கேட்ட உடனே வில்லன் நெஞ்சு கொதிக்கிறது, காசு வாங்கிக்கொண்டு நடித்த வில்லனுக்கே நெஞ்சு கொதிக்கிறது என்றால், காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு என்னவெல்லாம் கொதிக்கும்?? உடனே அந்த குண்டை செயலிழக்கச் செய்கிறார், கணிப்பொறி பற்றி ஒன்றும் தெரியாத சுறா, அதுவரை திரை அரங்கில் வெறும் விசும்பலாக கேட்டுக்கொண்டிருந்த மக்களின் அழுகை, இப்பொழுது ஒரு மரண ஓலம் போல கேட்கத் துவங்கியதாக கேள்வி.

ஆகவே நண்பர்களே, வாழ்வில் விரக்தியா? வாழ்கை கசக்கிறதா? செத்துவிடலாம் போல தோன்றுகிறதா? ஒரு நிமிடம் சிந்தியுங்கள், சுறா திரைப்படத்தை பாருங்கள், உங்களுக்குள் ஒரு வேகம் பிறக்கும், உங்களாலும் சாதிக்க முடியும் என்கிற எண்ணம் பிறக்கும். இது போன்ற கேடு கெட்ட மனிதர்கள் எல்லாம் வாழும் பொழுது, நாம் ஏன் வாழக்கூடாது என்கிற வலிமை பிறக்கும். இது போன்ற ஒரு தரம் கெட்ட படத்தில் விஜய் நடித்ததற்காக, அவருக்கு எங்களின் நெஞ்சார்ந்த அனுதாபங்கள். திரை அரங்குகளில் விஜய்யின் ரசிகர்கள் காரி உமிழ்ந்ததாக செய்திகள் வெளியானது, தமிழ் மக்கள் அவருக்கு கொடுத்த சரியான தண்டனை.

சன் குடும்பத்தினருக்கு கருப்பு பணம் அதிகமாக இருக்கிறது என்பது இந்த படத்தை பார்த்த பின் தெளிவாக தெரிகிறது. இப்படி ஒரு தரம் கெட்ட திரைப்படத்தை எப்படி ஒருவரால் தயாரிக்க முடியும்? உழைத்து சம்பாதித்த காசு என்றால் அதன் வலி புரிந்திருக்கும். எத்தனை குடும்பங்கள் பசியாலும், நோயாலும் வாடுகின்றன? இவ்வளவு பணத்தைக் கொட்டி இப்படி ஒரு கேவலமான படம் எடுப்பதைத் தவிர்த்து, அந்த பணத்தைத் தவிக்கும் ஏழைகளுக்கு தந்து உதவி இருந்தால் நாங்கள் வாழ்த்தி வணங்கியிருப்போம். விஜய்யின் அரசியல் எண்ணங்களை மக்களுக்கு தெரிவிக்க ஆசைப்பட்டால் அதை பல நல்ல காரியங்கள் செய்து செயலில் காட்டச் சொல்லுங்கள், இப்படி அபத்தமான கருத்துக்களைத் தன் படங்களில் பேசினால் மட்டும் அவர் அரசியல்வாதி ஆகிவிட முடியாது. உங்களின் ஆசைகளுக்கு எங்களை பலி ஆக்கக் கூடாது விஜய்.

Comments

  1. Neenga ivlo bayangarama feel panni sollirukkenga.. very true... vijay bayangara kodumaiyana padangala nadichutu 'Dr' pattam eduthhutaar. Naana day and night a UG, PG ellam padichum kooda Dr pattam kadaikkala.. Enna panna... anyways thanks for the hilarious review.. forwarded the link to my tamil speaking friends.. Keep posting such interesting reviews.. u Rock!!!

    ReplyDelete
  2. OMG .... sirichu sirichu vayathu vali...mudiyala...still ROFL-ing...

    Pls..Someone give Vijay VRS pls...

    hahahahahahahahahahaha

    ReplyDelete
  3. ROTFL :) yen kannelaaam thanni :) chance illa Sat..

    //காசு வாங்கிக்கொண்டு நடித்த வில்லனுக்கே நெஞ்சு கொதிக்கிறது என்றால், காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு என்னவெல்லாம் கொதிக்கும்?? //

    soooperrrrrr...

    //ஆகவே நண்பர்களே, வாழ்வில் விரக்தியா? வாழ்கை கசக்கிறதா? செத்துவிடலாம் போல தோன்றுகிறதா? ஒரு நிமிடம் சிந்தியுங்கள், சுறா திரைப்படத்தை பாருங்கள்//

    Vaazhvil virakthi yendraal Sura padam paaka vendaam. Satish in indha post padichaa podhum :) appidi oru puhunarchi varum :)

    ReplyDelete
  4. naanum vijay fan thaan .padam sumaar nnu ella fansum othukkurom.avarai enga nalla padam panna idureenga??.sachinn padam super padam,athu seri illa,ithu seri illa nnu odavidamma panniteeenga.inikki re-make padam onnu hit aaguthu nna athu vijay nadicha padamnaale thaan.dhanush kutti pannan .oducha???????.flop aayittu.billa ajith kku break thaan koduthuchu but vasool la B,C centre la seriya pogala.pokkiri,ghilli,thirumalai ithellam vijay re-make panna padam.so vijay ai kindle pannamma pothittu ponga

    ReplyDelete
  5. Haha... Sathyama enala siripa control panna mudiyala....!!

    After reading this post i couldnt even imagine me seeing this movie...Even for imagination its like hell....

    Inium vijay thirundhuvaar nu nambikai illa...

    God save ppl...!!

    Awesome post yaar...!! Hilarious... No other words...!!! :) :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Kadalai Podaradhu Eppadi ??