Laugh Out Loud ...

I got this piece of "letter" as a email forward from my friend (Maddy) and I should admit the fact that, I was laughing like mad for almost 15 minutes after reading this, and hence I thought of posting the same on my blog for my readers to read and enjoy the same happiness. I dont know the author of this piece of work, but I should admit that, the person who would have written this should be a genius. I salute that guy for this masterpiece creation. Hat's off to him !!!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப்பார்க்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். 'அலுவலகத்தில் இருக்கிறேன், நீல்கிரிசில் சாயங்காலம் சந்திக்கலாம்' என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது, கடமை தவறாதவரின் மகளைத்தான் காதலிக்கிறோம் என இருமார்ந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனை பார்த்த போது 'எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!' என்ற பழைய கவிதை தான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிகபட்சம் தான் என்றாலும், எருமை மாடு என்பது உன் அப்பனுக்கு மிக குறைந்த பட்சமே.

அந்த கடையில் பில் போடுவதற்க்காக இருந்த கம்ப்யூட்டரை தவிர மீதம் இருந்த அத்தனையும் தின்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்க தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சை துவங்கலாம் என் சர்வரை அழைத்தேன், அதற்கு பின் உனது அப்பாவின் கைங்கர்யத்தில் சமையல் கட்டிற்கும் டேபிளிர்க்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். காபி டேவிலும், சரவண பாவநிலும், நீ புல் கட்டு கட்டுவது ஒரு ஜெனிடிக் பிரச்சன்னை என்று கண்டுகொண்டேன். வேழ முகம் தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே.

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது 'தம்பி முன்ன மாதிரி சாப்பட முடியறதில்லப்பா ... வயசாசில்ல' என தன் திருவாய் மலர்ந்தார். திடபொருட்களில்லிருந்து, ரோஸ் மில்க், பாதாம் பால் போன்ற திரவப்பொருட்களுக்கு மாறினார், அப்பாடா, முடித்துவிட்டார் என்ற ஆசுவாசத்தை, 'ஒரு கசாட்டா' என்ற வார்த்தையில் உடைத்தார், கசாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்புடுவதில்லை என்பதை தவிர, திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்யாசங்கள் கூட இல்லை. 'தம்பி எப்போ சாப்பிட்டாலும், கடைசியா ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடறது நல்லதுப்பா', என்ற அவரது கூற்றில் இருந்த 'கடைசியா' எனும் வார்த்தை தான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

'சார், நா உங்க பொண்ணை விரும்பறேன், அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன், அது விஷயமா பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்' என்று மெல்ல பேச்சை துவங்கினேன். 'அப்போ போன வாரம் இதே விஷயமா பேச 'ஆனந்த பாவனுக்கு' வந்தது நீங்க இல்லையா தம்பி?!' என ஆச்சர்ர்யமாக அவர் கேட்டபோது தான், மொத்த குடும்பமும், இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை ப்ரொபெஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். 'தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசி தீர்துட முடியாது, நீங்க ஒன்னு பண்ணுங்க, நாளைக்கு சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க ... அப்போ பேசிக்கலாம்' என்ற உனது அப்பனை கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

Comments

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Madras Tamil in IT Industry