Kavidhaigal
தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்களோடு, என் கவிதைகளை படிக்கும் சுமையையும் உங்களிடம் தருகிறேன், இன்பமும், துன்பமும் கலந்தது தானே புத்தாண்டு ...
1. பேனாவின் மை கறைய தொடங்கியது,
காகிதத்தில் காவியமாய்
நெஞ்சத்தில் சுமை குறைய தொடங்கியது
அவள் என் முன் வந்தாள் ஓவியமாய்
2. வாழ்க்கை எனக்கு ஒரு கேள்விக்குறி,
எதிர்காலம் என்னவென்று தெரியாததால் அல்ல,
என் காதலை அவள் ஏற்காததால்
3. கருவை சுமந்து பார், தாயின் வலி புரியும்,
தனிமையை சுமந்து பார், ஏக்கத்தின் வலி புரியும்,
சாவை சுமந்து பார், பிரிவின் வலி புரியும்,
காதலை சுமந்து பார், வாழ்க்கையின் வலி புரியும்
4. வண்டுகளுக்கும் இறைவனுக்கும் இடையே வாக்குவாதம்,
பூக்களில் மட்டும் தான் தேன் எடுக்க அனுமதி என்கிறார் இறைவன்,
உன் இதழ்களிலும் தேன் எடுக்க கோரி கெஞ்சுகின்றன வண்டுகள்
5. வெறித்த பார்வையும்,
முளைத்த தாடியும்,
வரண்ட உதடுகளும்,
நடுங்கும் விரல்களும்,
ஊர்ஜினம் செய்தது, காதலின் தோல்வியை
6. நம் காதல் தெய்வீகமானது என்றாய் நீ,
பட்டாணி சுண்டலில் உப்பில்லை என்றேன் நான்,
நம் காதலை யாராலும் பிரிக்க முடியாது என்றாய் நீ,
கடற்கரையில் காற்று குறைவாக உள்ளது என்றேன் நான்,
உன் கண்களில் தோன்றி மறைந்தது ஒரு நீர் முத்து,
வேறு என்ன சொல்ல முடியும் என்னால்,
உன் திருமண அழைப்பிதழை கொடுக்க வந்த போது ?
7. கூண்டு கிளியை பார்த்து மகிழ்ந்து சிரித்தாள்,
மீன் தொட்டியில் நீந்தும் மீன்களை பார்த்து வியந்தாள்,
கூரை வழியே கசிந்த சூரியனை கைக்குள் அடக்கினாள்,
வேறு என்ன செய்வாள், வீட்டில் அடைக்கப்பட்ட இளம் விதவை ?
8. புல் நுனியில் பனி துளி,
மலர்கின்ற பூ மொட்டு,
விடிகாலை வெண்மேகம்,
கண்டதுண்டா எவரேனும் ?
நான் கண்டேன், என்னவளின் ஓர் சிரிப்பில்
9. எழுதவும் தெரியாது, படிக்கவும் தெரியாது,
விவரமும் புரியாது, வயதும் கிடையாது,
ஆனால் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது,
நிறுத்தத்தில் பிச்சை எடுக்கும் தாயின் இடுப்பில் தூங்கும் கை குழந்தை
10. "காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு, என்று பழக்க படுதிக்கொள்ளு பாப்பா"
என்ற கிழிந்த ஒரு பக்கத்தை படித்து பார்த்து சிரித்தான்,
ரோட்டில் பழைய பேப்பர் பொறுக்கும் ஐந்து வயது முருகன்.

Comments
Post a Comment